
15.08.2024 அன்று 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெத்தாவில் மருத்துவ சேவையாற்றும் செவிலியர்களுக்கு சிறப்பு தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் பதிவு முகாம் செவிலியர்கள் குடியிருப்புகளில் நடைபெற்றது
ஜெத்தா மேற்கு மண்டல் அயலக திமுக NRTIA பொறியாளர் காஜா மைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.

சவுதி அரேபியா அயலக திமுக NRTIA பொறுப்பாளர் திரு.பிரேம்நாத் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் அயலகத் தமிழர் நலனுக்கான நலத்திட்டங்கள் குறித்தும் அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினராக இணைந்து கிடைக்கப்பெறும் பயன்கள் அயலகத் தமிழர் நல வாரியத்தில் உள்ள அனைத்து நலத்திட்டங்கள் காப்பீடு உள்ளிட்ட அனைத்தும் செவிலியர்களுக்கு எடுத்து கூறப்பட்டு சந்தேகங்களுக்கும் விளக்கம் கூறப்பட்டு சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து செவிலியர்களையும் ஒன்றினைத்து வாரிய உறுப்பினராக எடுத்து வரும் முயற்சி பற்றியும் கூறப்பட்டது .

தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் அயலக திமுக மாநில செயலாளர் திரு MM. அப்துல்லா வாரிய தலைவர் வாரிய உறுப்பினர்கள் மற்றும் அயலக திமுக துணை செயலாளர் திரு. இராம விஜயன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல வாரிய உறுப்பினராக இணைய தங்கள் குடியிருப்புகளுக்கு வந்து பதிவு செய்து விழிப்புணர்வும் ஏற்படுத்தியதற்கு செவிலியர்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
அன்புடன் M.சிராஜ்
Comments