top of page

சவூதி சாலை விபத்தில் மறைந்த தமிழரின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைத்த NRTIA Riyadh வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத் (தி.மு.க அயலக அணி)

Writer's picture: RaceTamil NewsRaceTamil News

தமிழ்நாடு கடலூரை சேர்ந்த தமிழரசன், சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களால் தத்லீத் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படடு 15 மாதங்கள் கோமாவில் இருந்தார்.


சிகிச்சை பலனின்றி 01.07.2024 அன்று காலமானார்.


குடும்பத்தார்கள் ரியாத் திமுகவுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையிலும், மனு, பெறப்பட்ட அடிப்படையிலும், அதே நாளில் இந்திய தூதரகம் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சவுதி அரேபியா சட்டத் துணை ஒருங்கிணைப்பாளர் திரு.சந்தோஷுக்கும் அனுப்பப்பட்டது.


சட்டப்பூர்வ அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருக்க, திரு சந்தோஷ், அவர்கள் திரு. ராஜ் மற்றும் ஸ்பான்சர் ஆகியோரின் உதவியுடன் தேவையான ஆவணங்கள் ஓன்று சேர்க்க , இந்திய தூதரகம், சுகாதார அமைச்சகம் மற்றும் காவல்துறை உதவியுடன் 02.08.2024 அன்று தமிழகத்திற்கு தமிழரசன் உடல் தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.


சட்டப்பூர்வ அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருக்க, திரு . சந்தோஷ், அவர்கள் திரு. ராஜ் மற்றும் ஸ்பான்சர் ஆகியோரின் உதவியுடன் தேவையான ஆவணங்கள் ஓன்று சேர்க்க , இந்திய தூதரகம், சுகாதார அமைச்சகம் மற்றும் காவல்துறை உதவியுடன் 02.08.2024 அன்று தமிழகத்திற்கு தமிழரசன் உடல் தாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.


திரு. சிராஜுதீன் ஜித்தா தமிழ் சங்கம் மறைந்தவரின் குடும்ப உறவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பதற்கு உதவியாக இருந்தார். அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு உதவியது.


02.08.2024 அன்று அண்ணா அறிவாலயம் திமுக அமைப்பு செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி, திமுக தலைமை நிலையச் செயலாளர் தலைமை நிலைய அலுவலக செயலாளர்கள் திரு. துறைமுகம் காஜா, மற்றும் திரு. பூச்சி முருகன் முன்னிலையில் ரியாத் திமுக சார்பில் 65 ஆயிரம் இந்திய ரூபாய் இறுதிச் சடங்கு செலவுக்கு கொடுக்கப்பட்டது.


இந்த சேவையில்

துணை அமைப்பாளர்:திரு.சந்தோஷ்

ஒருங்கிணைப்பாளர்: திரு. ஜனார்த்தனன்

ரியாத் தலைவர்: திரு.ஐயப்பாடி ஜாக்ரி

துணை ஒருங்கிணைப்பாளர்: திரு.வாசிம் ராஜா,

இளைஞர் அணி செயலாளர்: திரு.அப்துல் ரஹ்மான் மற்றும் அனைத்து NRTIA உறுப்பினர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

தகவல்: அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மற்றும் NRTIA Riyadh வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத் (தி.மு.க அயலக அணி)


அன்புடன் M.சிராஜ்

108 views0 comments

Comments


bottom of page