top of page

NRTIA- Riyadh chapter (வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத்) தி.மு.க அயலக அணி சவூதி அரேபியா ரியாத் சார்பாக உதவி

Writer: RaceTamil NewsRaceTamil News

சவூதி அரேபியா யான்பு நகரில் பொது வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்த காட்டு மாந்தாங்கல், எமனேஸ்வரம், பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் தமிழ் நாட்டை சேர்ந்த திரு.மணிமுத்து அவர்கள் மார்ச் 30, 2024 அன்று மின்சாரம் தாக்கி காலமானார்.


குடும்பத்தார்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் உடலை இந்தியாவுக்கு, இந்திய தூதரகம், சுகாதார அமைச்சகத்தின் மற்றும் காவல்துறை உதவியுடன் 20.05.2024 அன்று தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்திய தூதரகத்திடம் இருந்து அனுமதி பெறுவதற்கு திரு. காஜா மொய்தீன் ஜித்தா தமிழ் சங்கம் உதவி செய்தார். திரு. ரமேஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட அனைத்து அதிகாரப்பூர்வ ஆவணங்களும் நிறுவனத்தின் ஸ்பான்சர் உதவியுடன் சம்பந்தப்பட்ட துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.


அனைத்து வேலைகளும் திரு. ரமேஷ் உதவியுடனும் ஒருங்கிணைப்புடனும் நடந்தன ஆனால் அவருக்கு சட்டப்பூர்வ அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது.. இந்நிலையில் NRITA வின் துணை அமைப்பாளர் டாக்டர் திரு.சந்தோஷ் அவர்களின் முயற்சியால் இந்திய தூதரக ரியாத்தின் உதவியுடன், அனைத்து சட்ட அனுமதிகளும் நிறுவனத்தின் உதவி மூலம் இறுதி வெளியேற்றத்தை தொடர அனுமதி பெற்றன.


திரு. சந்தோஷ் NRTIA அவர்கள் இறந்நவரின் குடும்ப உறவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்"ஆம்புலன்ஸ் சேவைக்கு அழைப்பு தெரிவித்து அனைத்து உதவிகளும் செய்தார்.


இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் துணை அமைப்பாளர்: திரு.சந்தோஷ் ஒருங்கிணைப்பாளர்: திரு. ஜனார்த்தனன் ரியாத் தலைவர்: திரு.ஐயப்பாடி ஜாக்ரி உசேன் துணை ஒருங்கிணைப்பாளர்: திரு.வாசிம் ராஜா, இளைஞர் அணி செயலாளர்: திரு.அப்துல் ரஹ்மான் மற்றும் அனைத்து NRTIA உறுப்பினர்களுக்கு இறந்த மணி முத்துவின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.


அன்புடன் சிராஜ்

 
 
 

Comments


bottom of page