மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி KS மஸ்தான் அவர்களை தாயிப் நகரில் NRTIA மற்றும் தமிழ்ச்சங்கங்கள் சந்திப்பு!

NRTIA சவுதி அரேபியா பொறுப்பாளர் பிரேம் நாத் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார். குறிப்பாக
அவசர கால கடவுசீட்டில் செல்லும் தமிழர்களுக்கு மும்பை டெல்லி விமான நிலையங்களில் இருந்து சென்னை செல்வதற்கு இலவச பயண சீட்டு மற்றும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
சவுதி அரேபியாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு நேரடி விமான சேவை இல்லாததால் பெரிதும் அவதிக்குள்ளாகும் தமிழர்களின் நலனுக்காக நேரடி விமான சேவை தொடங்க ஏற்பாடுகள்,
வீட்டுப்பணி பெண்கள் மற்றும் ஓட்டுனர்களாக சவுதி அரேபியாவிற்க்கு வருகை தரும் முன்பாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலம் பதிவு செய்த பின்பு பயணிக்கும் விதிமுறை கொண்டுவருவது, தொழிலாளர்களாக பணியாற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களில் பிள்ளைகளின் கல்வி நலன் கருதி ஊக்கத்தொகை வழங்கிடவும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதிலளித்து கூறிய அமைச்சர் அவர்கள் முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்நிகழ்வில் ரியாத் மண்டல NRTIA பொறுப்பாளர் சந்தோஷ் பிரேம் வின்பிரெட் தம்மாம் மண்டல NRTIA பொறுப்பாளர் ஆரீஃப் மக்பூல், அபஹா NRTIA பொறுப்பாளர் முருகதாஸ் உள்ளிட்ட அனைத்து மண்டல NRTIA உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

சவுதி அரேபியாவில் இயங்கும் அனைத்து தமிழ்ச் சங்கங்களின் சார்பாக பொறியாளர் காஜா மைதீன் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் பல்வேறு கோரிக்கை வைத்தார் குறிப்பாக வளைகுடா நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் தகவல்கள் இணைய வாயிலாக பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்து தமிழர்களின் புள்ளி விபர தகவல் தளம் மற்றும் தேர்தல் சமயத்தில் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்கும் வசதி பெற்று தரவும் கோரிக்கை வைத்து சவுதி அரேபியா வருகை தந்த அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் பதிவு இணையதளம் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களை நிர்வாகிகள் பிரதிநிதிகள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் தாயிஃப் தமிழ் சங்க நிர்வாகி கார்த்திகேயன் ராஜகோபால் தாயிஃப் நகர தமிழ் பிரமுகர்கள் நசிர் உவைஸ் உள்ளிட்ட ஜூபைல் நகர தமிழ் பிரமுகர் ராஜேஷ் உள்ளிட்ட பல்வேறு தமிழ் சங்கம் உறுப்பினர்கள் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியன் வெல்ஃபேர் பாரம் சவுதி ஒருங்கிணைப்பாளர் மீமிசல் நூர் முகமது உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் உடன் இருந்தனர். முன்னதாக NRTIA மற்றும் தமிழ்ச் சங்கத்தினர் உள்ளிட்ட தமிழர்கள் உற்சாக வரவேற்பளித்து பொன்னாடை போர்த்தி மாண்புமிகு அமைச்சர் அவர்களை கவுரவித்தனர். நிகழ்வில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையர் துணை தலைவர் இறையன்பன் குத்தூஸ் கலந்து கொண்டார்.
Comments