
சவூதி அரேபியாவில் 19 மே 2023 வெள்ளி மாலை சவுதி அரேபியா தென் மண்டல திமுக அயலக அணி, Non resident Indian Tamil association மற்றும் அபஹா தமிழ் சங்கம் இணைந்து அபாவில் பள்ளியில் முதலிடம் பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா இந்து தர்பார் உணவகத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது. செல்வி ஆப்ரின் சூரா இறை வணக்கத்துடன் தொடங்கி , கமீஸ் பகுதி திமுக அயலக அணியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சகாய கணேஷ் அவர்களை பாராட்டி பிரிவு உபச்சார பரிசு வழங்கினார்.
நடுவன் இடைநிலை கல்வி வாரியம் CBSC 2023 நடத்திய 10 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவி ஜோபினா, சிருஷா ரிஹான் அஹ்மத் ஆகிய மாணவ மாணவிகளை பாராட்டி சிறப்பு பரிசுகளை சவுதி அரேபியா தென்மண்டல திமுக அயலக அணி மற்றும் அபகா தமிழ் சங்கம் சார்பாக திரு.K.முருகதாஸ் அவர்கள், திரு. இஸ்மாயில் அவர்கள், முனைவர் ஆனந்த் தேவத்துரை, முனைவர் ராம்குமார் அவர்கள்,திரு. டேவிட் கமலஹாசன், திரு அரியபுத்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி விருது வழங்கி விழாவை சிறப்பித்தனர்.
இறுதியில் திரு.இஸ்மாயில் அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
Comments