சவுதி அரேபியாவில் ஆசிர் மண்டலம் காமிஸ் முஷைத் அடுத்த மத்தாவில் இறந்த திரு. பிரசாத் தர்மராஜா அவர்கள் சூர்யகோட், குலசேகரம், கன்னியாகுமரி , தமிழ்நாட்டை சேர்ந்தவர். கன்னியாகுமரி மாவட்ட அயலக தி.மு.க பொறுப்பாளர் திரு. பாலூர் தேவா அவர்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் திரு. பிரசாத் தர்மராஜா அவர்களின் உடலை *NRT -SAUDI ARABIA & அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை - சவுதி அரேபியா அசீர் மண்டலம் திரு. இஸ்மாயில் உசேன், திரு.நூஹ் அப்துல்லா கான், மற்றும் திரு. ஆனந்த் தேவ துரை ஆகியோர் அனுப்பிவைத்தனர்.
காமிஸ் முஷைத் அடுத்த மத்தாவில் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வந்த திரு.பிரசாத் தர்மராஜா அவர்கள் 15.10.2024 அன்று இருதய நோய் ( மாரடைப்பு) காரணமாக மரணமடைந்தார். சவூதி அரேபியா அசீர் மண்டலம் காமிஸ் முஷைத் சார்பாக திரு.இஸ்மாயில் உசேன் மற்றும் திரு.நூஹ் அப்துல்லா மற்றும் திரு.ஆனந்த் தேவ துரை அவர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் சேகரித்து, ஜித்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், மற்றும் கமீஸ் முஷைத் உள்ள சவூதி சுகாதார அமைச்சகம் மற்றும் மத்தா காவல்துறை உதவியுடன் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடலை தாயகம் அனுப்பி வைக்க தேவையான பொருளாதார நிலை இல்லாததால் சிரமம் ஏற்பட்டது. இதனை இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் திரு. நூஹ் அப்துல்லா அவர்கள் ஆலோசித்து சவூதி அரேபியா அசீர் மண்டலம் காமிஸ் முஷைத் சார்பாக உரிய நடவடிக்கை எடுத்து இந்திய அரசாங்க செலவில் அவரது உடலை கடந்த 04.12.2024 அன்று தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. திரு.இஸ்மாயில் உசேன் அவர்கள் இறுதி வரை உடன் இருந்து அனைத்து பயண ஏற்பாடுகளை கவனித்தார்.
ரியாத்தில் இருந்து Dr. சந்தோஷ் (Deputy Organizer NRTIA) மற்றும் சட்ட துணை ஒருங்கிணைப்பாளர் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் அவர்கள் இறந்நவரின் குடும்ப உறவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் Non Resident Tamils NRT CHENNAI அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம்" மூலம் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அனைத்து உதவிகளும் செய்தார்.
தகவல்:
NRT -SAUDI ARABIA & அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை - சவுதி அரேபியா அசீர் மண்டலம்.
அன்புடன் M.Siraj
Comments