
பழனி பகுதி பாப்பம்பட்டி, கலயம்புத்தூர் கிராமத்தை சார்ந்த கணவனை இழந்த திருமதி நாகவேணி என்ற பெண்மணி ஒரு வருட கைக்குழந்தையுடன் தனது வாழ்வாதாரத்திற்காக போராடி வரும் செய்தி சவுதி அரேபியாவின் ஒருங்கிணைந்த தமிழ்ச் சங்கத்திற்கு கிடைத்தது.
தற்சமயம் விடுமுறையில் ஊரில் இருக்கும் சங்க உறுப்பினர் திரு.செந்தில் வடிவேலு அவர்கள் மற்றும் அந்த கிராமத்து சமூக சேவகர் திரு.சங்கர் ஆகிய இருவர் மூலம் களநிலவரம் அறியப்பட்டு, அதில் அந்தப் பெண்மணி தையல் பயின்று இருப்பதால் அவருக்கு ஒரு தையல் இயந்திரம் வாங்கிக் கொடுக்கலாம் என்ற பரிந்துரையின் அடிப்படையில் புதிய தானியங்கி தையல் இயந்திரம், இந்த மாதம் 5 தேதி திரு சிராஜ் ( ஜெத்தா தமிழ்ச் சங்கம்), திரு செந்தில் வடிவேலு (அல் ஹசா தமிழ்ச்சங்கம்) இருவரும், அந்த கிராமத்தை சேர்ந்த திரு சங்கர், திரு பழனிச்சாமி, திரு கரிகாலன், மற்றும் திரு முருகானந்தம் முன்னிலையில் சவுதி அரேபியாவின் ஒருங்கிணைந்த தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஒரு தையல் இயந்திரம் வாங்கி அளிக்கப்பட்டது.
உதவி புரிந்த ஒருங்கிணைந்த தமிழ்ச்சங்கத்தின் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பயனாளர் சார்பிலும் இந்த கிராம மக்கள் சார்பிலும் சமூக ஆர்வலர் திரு சங்கர் அவர்கள் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Comments