top of page
Writer's pictureRaceTamil News

UAE கடத்தல் பிரச்சாரம்; வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை போலீசார் கண்டுபிடித்தனர்




ஷார்ஜாவில் சிறுமி கடத்தப்பட்டதாக காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது . அதனைத் தொடர்ந்து சிறுமி தேடும் பணியை காவல்துறை தொடங்கியுள்ளார்கள்.இறுதியாக பொலிசார் தேடுதலின் போது சிறுமியை கண்டுபிடித்தபோது சிறுமி ​​வீட்டில் ஏற்பட்ட சண்டையின் காரணமாக அவர் தானே வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்துள்ளது.


மேலும் சிறுமி கடத்தப்பட்டதாக கருதி சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. விசாரணையில், சிறுமி தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. இதுகுறித்து ஷார்ஜா காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் கர்னல் ஒமர் அகமது பு அல் சவுத் கூறுகையில், தகவல் கிடைத்ததும் காணாமல் போன சிறுமியைத் தேட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.


தற்போது சிறுமி கிடைத்துவிட்டால் ஆரோக்கியமாகவும் இருக்கிறாள். மேலும் குடும்ப தகராறு காரணமாக சிறுமி தனது சொந்த விருப்பத்தின் பேரில் வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். சமூகத்தை கவலையடையச் செய்யும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கர்னல் உமர் அகமது பு அல் சவுத் அறிவுறுத்தினார். சிறுமி குறித்த கூடுதல் தகவல்களை போலீசார் வெளியிடவில்லை.



コメント


bottom of page