
ஷாரோ சதீஷ் எழுதிய "Cancer O Nirvana" என்ற நினைவுக் குறிப்பு ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியின் போது பல தரப்பட்ட எழுத்தாளர்கள் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் மன்றத்தில் வெளியிடப்பட்டது. புத்தக வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் மன்சூர் பல்லூர் புத்தகத்தை வழங்க சிஎஸ்எஸ் குழுமத்தின் தலைவர் டி.எஸ்.கலாதரன் பெற்றுக் கொண்டார்.

ஷாரோ சதீஷ் எழுதிய இதயத்தை வருடும் நினைவுக் குறிப்பு, புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளரும் கேரள திரைப்பட துறை கூட்டமைப்பின் துணைத் தலைவருமான சதீஷ் குற்றியில் அவர்களின் இறுதி நாட்கள் அழகாக விவரிக்கிறது. அன்புக்குரிய சதீஷை இழந்த வேதனை, வாழ்க்கையின் நோக்கம் ஆகியவற்றை ஆழமாக நகர்த்தும் ஆய்வு புத்தகம் என மன்சூர் பல்லூர் இந்நூலை வெகுவாக பாராட்டினார்.
புத்தக அறிமுகம் டாக்டர் தன லட்சுமி வழங்க நிகழ்ச்சியை மதிப்புமிக்க கலைஞர் மச்சிங்கல் ராதாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். மிதுன் ரமேஷ், வெளியீட்டாளர் பிரதாபன் தாயத் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்க பேச்சாளர்களாக இருக்க இந்த புத்தகத்தை எழுதிய ஷரோ சதீஷ் அவர்கள் புத்தகத்தின் உருவாக்கம் குறித்த நுண்ணறிவுகளை பகிர்ந்து கொண்டார்.
வழக்கறிஞர் சைரா சதீஷ், வழக்கறிஞர் ஒய். ஏ. ரஹீம், பிரிட்டோ சதீஷ், மற்றும் சசிகலா பிரிட்டோ ஆகியோர் வருகை நிகழ்வின் முக்கியத்துவம் மேலும் மெருகேற்றியது.
அன்புடன் சிராஜ்
Comments