
இன்று ( 16-6-24 )ஜித்தாவில் அஜிஸியா இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் இணைந்து நடத்திய ஹஜ் பெருநாள் தொழுகையில் 700க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.

இதில் மௌலவி A. L.அப்துல்லாஹ் காசிமி அவர்கள் காலத்திற்கு தேவையான சிறந்த உரையாற்றினார். இறுதியில் பலஸ்தீன் மக்களுக்கு துஆவுடன் உரை நிறைவு பெற்றது. தமிழில் குத்பா உரையாற்றினார்.

நகரத்தை விட்டு 30 நிமிடம் தூரம் இருந்தும் தொழுகை ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே பெரும் திரளாக மக்கள் கூடி தக்பீர் சொல்லியதும் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்கள் கூறி இனிப்புகளை பரிமாறி கொண்டது தாயக பெருநாளை நினைவுபடுத்தியது.
அன்புடன் சிராஜ்
Comments