ஜித்தா இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நடத்திய மெகா இஃப்தார் நிகழ்ச்சி ஆனது ஏப்ரல் 14 தேதி ஜித்தாவில் மிக சிறப்பாக சமுதாய சொந்தங்களுடன் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. மிக குறுகிய நாளில் ஏற்பாடு செய்தும் பெரும் திரளாக 500க்கு மேற்பட்ட சகோதர சகோதரிகள் இதில் கலந்து கொண்டனர்.
இஸ்லாம் முழுமையானது என்ற தலைப்பில் காலத்திற்கு ஏற்ற சிறப்பான முறையில் மௌலவி அப்துல் பாசித் புகாரி அவர்களும் ,தொழுகையின் சில துளிகள் என்ற தலைப்பில் இரத்தின சுருக்கமாக சகோ. அப்துல் மஜித் பத்ருதீன் அவர்களும் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஜித்தாவில் உள்ள அனைத்து தமிழ் அமைப்பு பிரதிநிதிகளுக்கும், கலந்து கொண்டனர்.
சிற்றுரையாற்றிய பொறியாளர் கீழை இர்ப்பான் அனைத்து மக்களும் IWF ல் இணைந்து மக்களுக்கு சமுதாய பணி செய்ய அழைப்பு விடுத்தார். நிகழ்ச்சியில் 20 மேற்பட்டவர்கள் IWF ல் தங்களை உடனே இணைத்து கொண்டனர். மேலும் பல சகோதரர்கள் தங்களை உறுப்பினராக இணைத்து கொள்ள இணையத்தின் மூலம் ஒப்புதல் தந்து உள்ளனர். நிகழ்ச்சிக்கு அஹ்மத் பஷிர் தலைமை தாங்கினார்.
இறுதியாக பொறியாளர் அப்துல் ஹலீம் நிகழ்ச்சிக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஒத்துழைத்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்..
நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்த நிர்வாகிகள் ரில்வான், அஸ்ரப், சமது, நாசர், அப்துல் மஜூத், பதுருதீன் மற்றும் கழக சகோதரர்கள்.
Comments