ராசல் கைமாவில் உள்ள எமிரேட்ஸ் மார்க்கெட் ஷாப்பிங் வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.(திங்கட்கிழமை) மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்புப் பிரிவின் நான்கு தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அல் தக்தக்கா,அல் ஜசீரா அல் ஹம்ரா மற்றும் அல் ரிஃபா நிலையங்களில் இருந்து மூன்று தீயணைப்பு படை குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதாக ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அப்துல்லா அல் சாபி தெரிவித்தார்.
ராசல் கைமா சிவில் பாதுகாப்புத் துறையின் செயல் துணை இயக்குநர் கர்னல் ஹமத் சல்மீன் தலைமையிலான குழு நான்கு நிமிடங்களில் சம்பவ இடத்திற்குச் சென்றது. தீயை அணைக்க ஒரு மணி நேரம் ஆனதாக தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் அந்த இடம் ஆய்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அல் சாபி தெரிவித்தார். இரவு 10 மணியளவில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அறிவிப்பில், இந்தப் பக்கம் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளதாக ராசல் கைமா காவல்துறை தெரிவித்துள்ளது. தீ விபத்து குறித்த வீடியோ காட்சிகளை மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். முஹம்மது பின் சேலம் சாலையை வழக்கமாகப் பயன்படுத்துபவர்கள் மற்ற வழிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments