
ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கு பல காரணங்கள் உள்ளன. அதிகமான மரங்கள் வெட்டப்படுதல், நகரமயமாக்கல், மக்கள் தொகைப் பெருக்கம், மின்சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு, மற்றும் எரிபொருள்கள் மூலம் வெளியேற்றப்படும் தீவிர கரியமில வாயுக்கள் போன்றவை இயற்கை சமநிலையை பாதிக்கின்றன.

மறைந்த பாரத ஜனாதிபதி திரு அப்துல் கலாம் அவர்களின் அன்புக் கட்டளைக்கு இணங்க சவூதி அரேபியாவில் இயங்கும் ஜெத்தா தமிழ்ச்சங்கம் 2016 ஆண்டு முதல் இந்தப் பிரச்சனைக்கு மிகச் சிறந்த தீர்வாக மரக்கன்றுகள் நடுதல் ஒரு கடமையாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். ்மரங்கள் அதிகமாக நடப்படுவதன் மூலம் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைடு குறைக்கப்படும், ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கப்படும், வெப்பநிலை கட்டுப்படுத்தப்படும், மற்றும் மழைப்பொழிவு தூண்டப்படும். மேலும், மரங்கள் பசுமை சூழலுக்கு உறுதுணையாக இருந்து நிலத்தடி நீரை பாதுகாக்கவும், மண் அரிப்பு தவிர்க்கவும் உதவும் என்ற வகையில் பள்ளிகளில் மரங்கள் நட்டு பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஒரு மரமாவது நட்டால், இயற்கை சமநிலை திரும்பி வரக்கூடும் என்ற கருத்தை பள்ளிகள், சங்கங்கள், சமூக அமைப்புகள், மற்றும் தனிப்பட்ட நபர்களுக்கு ஜெத்தா தமிழ் சங்கத்தினர் புரிய வைக்கின்றனர். ஒரு மரம் - ஒரு மனிதன் என்ற கொள்கையை கடைபிடித்து, எதிர்கால தலைமுறைக்கு பசுமை உலகை உருவாக்குவோம் என்ற எண்ணத்தில் ஜெத்தா தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் திருமண நாள் மற்றும் பிறந்தநாள் அன்று மரக்கன்றுகள் நடுவதை ஒரு கடமையாகவே எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் இதுவரை 56,000 மரத்துக்கு மேல் நடப்பட்டு பராமரித்து சாதனை புரிந்து வருகிறார்கள்.
ஜெத்தா தமிழ்ச்சங்கம் (JTS)
அன்புடன் M.Siraj
Commenti