ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் 24 வது மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவானது லக்கி தர்பார் உணவகத்தில் சிறப்பு இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜெத்தா தமிழ்ச் சங்கம் சார்பாக இனிதாக நடைபெற்றது. துவக்க நிகழ்வாக செல்வி ஆசிபா கிராத் ஓதினார் அவரைத் தொடர்ந்து திரு ஜெய் ஷங்கர் விருந்தினர்களை வரவேற்றார்.
முக்கிய விருந்தினர் ஜனாப் ரஹமதுல்லா அவர்களுக்கு திரு பேரரசும், சவூதி கெசட் திரு ராம் நாராயண் அவர்களுக்கு திரு சுப்ரமணியனும், இந்தியக் பன்னாட்டு பள்ளி துணை முதல்வர் பர்ஹா மேடம் அவர்களுக்கு திருமதி பாத்திலா நிஸ்ரின் காஜா மொஹிதீனும், சிறப்பு விருந்தினர் மௌலவி சிராஜுதீன் யூஸுபி அவர்களுக்கு திரு ரமணனும் பூங்கொத்து கொடுத்து மேடைக்கு அழைத்தனர்.
சிறப்பு விருந்தினர் மௌலவி சிராஜுதீன் யூஸுபி நோன்பின் மாண்பினையும் மத நல்லிணக்கத்தின் சிறப்பினையும் விளக்கினார். தமது பார்வையில் ஜெத்தா தமிழ்ச் சங்கம் என்பது பற்றியும் அதன் சேவைகள் குறித்தும் சகோதரர் அப்துல் மஜீத் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து மருத்துவர் திருமதி ஜெயஸ்ரீ மூர்த்தி நோன்பு இருப்பதின் சிறப்பினையும் நிகழ்வினை சிறப்பான முறையில் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்யும் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் முயற்சியையும் பாராட்டினார். மேலும் விழாவில் திரு முரளி அவர்கள் கடந்த மாதங்களில் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சேவைகள் பட்டியலிட்டார். விழா நிறைவில் திரு அஹமத் பாஷா நன்றி கூறினார்.
ஜெத்தா தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் மட்டுமன்றி ஏராளமான சகோதர அமைப்பின் தோழர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வை துவக்க உரையாற்றி வெகு சிறப்பாக நிகழ்ச்சி முழுவதும் தொகுத்து வழங்கினார் பொறியாளர் காஜா மைதீன் அவர்கள்.இந்த சிறப்பான நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை திரு முரளி ஒருங்கிணைத்தார்.
Comments