
ஜெத்தா திருவிதாங்கூர் சங்கம் (ஜே.டி.ஏ) சார்பில் ஓணம் பண்டிகை பிரமாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது.
திருவிதாங்கூர் பகுதி எனப்படும் கன்னியாகுமரி முதல் திருச்சூர் மற்றும் ஆலப்புழா முதல் இடுக்கி மாவட்டங்கள் வரை அடங்கிய பகுதியை சேர்ந்த மக்கள், கேரளாவின் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகையை ஜெத்தாவில் மிகவும் விமர்சையாக கொண்டாடினார்கள். ஜே.டி.ஏ கலைஞர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் இணைந்து கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

அத்த பூக்கோலம் என்னும் பூக்களால் அலங்கரித்தல், கேரளா கலாச்சார பொது விருந்து, பாடல்கள், திருவாதிரை என்னும் பெண்கள் நடனம், கயிறு இழுத்தல் போட்டி, ஸ்பூன் எலுமிச்சை வைத்து கொண்டு சிறுவர்கள் ஓடுதல், நடனங்கள், புலி போன்று வேடம் இடுதல் என்று கேரளா பொது கலாச்சாரத்தை மிகச் சிரத்தையுடன் அரங்கேற்றி வந்தவர்களை மகிழ்வித்தார்கள். அதில் மகாபலியாக வேடமிட்டு டென்னிசன் சாக்கோ அசத்தினார்.

நிகழ்ச்சியை நௌஷாத் பன்மணா, ரஷீத் ஓயூர், அனில் வித்யாதரன், ஆஷிர் கொல்லம், சுல்பிக்கர் கொல்லம், ஷிஹாப் தாமரக்குளம், முகமது ராபி, ஜோதி பாபு, ஷாஹினா ஆஷிர், பிரிஜின்ஸ், ஸ்ரீதேவி, ரெம்யா, சபீனா ராபி, பிரீத்தி டென்சன், ஷாஜி ராயல் கயம்குளம், மஜா சாஹிப் ஓச்சிரா, நவாஸ் பீமபள்ளி , முஜீப் கன்னியாகுமரி, மசூத் பலராமபுரம், மஹீன் குலாச்சல், நவாஸ் சித்தர், ஷாஹில் போன்றோர் வழி நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு புரவலர் நசீர் வாவா குஞ்சு, தலைவர் அலி தெக்குத்தோட்டை, ரெஜிகுமார், ரஃபி பீமபள்ளி, அயூப் பாந்தளம், ஷரப் பத்தனம்திட்டா, நூஹ் பீமபள்ளி, ரதீஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
குடும்பத்துடன் ஏராளமானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சமூக கலாச்சார அமைப்புகள் கலந்து கொண்டு, மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிய ஜெத்தா திருவிதாங்கூர் சங்கம் அமைப்புக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.
அன்புடன் சிராஜ்
Comments