ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக
*பெண்களுக்கான தமிழ் பேச்சுப் போட்டி*
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சவுதி அரேபியா மட்டுமன்றி தமிழ்நாட்டில் உள்ள பெண்களும் கலந்து கொள்ளலாம். அதன் விதிமுறைகள் பின்வருமாறு,
1) கீழே கொடுக்கப் பட்டுள்ள தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் மூன்று நிமிடங்களுக்கு மேல் ஐந்து நிமிடங்களுக்குள் பேச வேண்டும்.* ஆயிரம் கதை சொல்லும் நம் அஞ்சறைப் பெட்டிகள்.* மகாகவி பாரதியிடம் என்னைக் கவர்ந்தது* பெண்ணே உன் வாழ்க்கை உன் கையில்* சமுதாய முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு
2 பேச்சினை இடைநில்லாமல் பேசி ஒளிப்பதிவு செய்து கீழ்கண்ட வாட்சப் எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.
3. தங்களது பெயர், தந்தை/கணவர் பெயர், செய்யும் பணி, மற்றும் வசிக்கும் இடம் ஆகியவற்றை முதலில் கூறி பின் பேசத் துவங்க வேண்டும்.
4. வீடியோ எடிட்டிங், புத்தகத்தை அல்லது வேறு எதையும் மறைவாக பார்த்து வாசிப்பது, பிறர் சொல்லிக் கொடுத்து ஒப்புவிப்பது போன்ற முறைகேடுகள் தவிர்க்கப்பட வேண்டும்.
5. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
6. கலந்து கொள்ளும் அனைத்து பெண்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
7. முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு சான்றிதழுடன் சிறப்புப் பரிசும் வழங்கப்படும்.
8. காணொளிப் பதிவுகளை அனுப்ப வேண்டிய எண் +91 95620 81986 மற்றும் jeddahtamilsangam@gmail.com
9. காணொளிகள் வரும் 24ந் தேதி இரவு 12 மணிக்குள் வந்து சேர வேண்டும்.சிந்தை தினம் மகிழ சீரிய தமிழ் பேசிசிறப்புகள் பல பெற அனைவரும் பங்கு பெறவேண்டும் என்று ஜெத்தா தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கேட்டு கொண்டனர்.
அன்புடன் சிராஜ்
Comments