top of page
Writer's pictureRaceTamil News

NRTIA- Riyadh chapter (வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத்) அயலக அணி கோரிக்கை மற்றும் நிறுவனத்தின் தேவையின் அடிப்படையில் ஜெத்தா தமிழ்ச் சங்கம் சார்பாக உதவி.

Updated: Jun 8, 2024

சவூதி அரேபியா ரியாதில் வேலை பார்த்துவந்த பீகார் பாட்னா நகரை சேர்ந்த திரு. முகமது ஹஸ்முதின் அன்சாரி, 14/05/2024 அன்று சாலை விபத்துக்குள்ளாகி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார்.



குடும்பத்தார்கள் விருப்பம் தெரிவித்ததின் அடிப்படையில் இறந்த உடலை இந்திய தூதரகம் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மற்றும் காவல்துறை உதவியுடன் 27.05.2024 அன்று பீகாருக்கு அனுப்பி வைத்தனர்.


திரு. ஜெய்சங்கர் ஜெத்தா தமிழ்ச் சங்கம், தனது கடின உழைப்பால், இறந்த முகமது ஹஸ்முதின் அன்சாரி வேலை பார்த்த நிறுவனம் மூலம் ஆவணங்களை சேகரித்து , ஜெத்தா இந்திய துணைத் தூதரகம் சமர்ப்பித்து, NOC பெற்றுக்கொண்டார்.



நிறுவனத்தின் மனிதவள மேலாளர், மறைந்த முகமது ஹஸ்முதின் அன்சாரி அவரது குடும்பம் உறவுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பதற்கும் நிறுவனத்திடமிருந்து ஊதியத்தின் Final settlement நிறுவனத்திலிருந்து குடும்பத்திற்கு கிடைப்பதற்கும் NRTIA Riyadh chapterவெளிநாடுவாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத் (அயலக அணி)* திரு. சந்தோஷ் உதவினார்.


கடவுளின் சேவை பணியில் எப்போதும் முழுமூச்சாக செய்யப்படும் NRTIA Riyadh chapter வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர்கள் சங்கம் -ரியாத் (அயலக அணி)* துணை அமைப்பாளர்: திரு. சந்தோஷ் பிரேம், ஒருங்கிணைப்பாளர் திரு. ஜனார்த்தனன், ரியாத் மண்டல தலைவர் திரு.ஐயப்பாடி ஜாக்ரி உசேன், இளைஞர் அணி செயலாளர்: திரு. அப்துல் ரஹ்மான் மற்றும் திரு. ஜெய்சங்கர் நிர்வாக உறுப்பினர் ஜெத்தா தமிழ்ச் சங்கம், அவர்களுக்கும் ,மறைந்த அன்சாரியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.


அன்புடன் சிராஜ்.

333 views0 comments

Comments


bottom of page