
ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான மினி மாரத்தான் போட்டி ஜெத்தா ரிஹாப் பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது. சிறுவர்களுக்கு 1.5 கிலோ மீட்டர் தூரமும், பெண்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரமும் ஓட்டம் நடைபெற்றது.

காலை 7 மணி முதல் சிறுவர்கள் முதல் அனைவரும் ஆர்வமுடன் வந்து நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜெத்தா தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் பங்கு கொண்டு நிறைவு செய்த அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து அணைத்து ஏற்பாடுகளும் செய்த சமீர் அலுவலக வேலை காரணமாக கடைசி நிமிடத்தில் ரியாத் போக வேண்டிய காரணத்தால் அந்த பொறுப்பை ஏற்று திரு.ஜெய் ஷங்கர் அனைத்தும் கச்சிதமாக செய்து முடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
நிகழ்ச்சியினை ஜெத்தா தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர் உடனிருந்து தேவையான ஆலோசனைகள் வழங்கினர்
அன்புடன் சிராஜ்
Comments