
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் அறிவுரைப்படி தொடர்ந்து பல வருடங்களாக மரம் நடுவதை முழுவீச்சாக செய்துவருவது ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சேவைகளுள் ஒன்று. இதுவரை கிட்டத்தட்ட 50,000மரங்களுக்கு மேல் நட்டி சாதனை படைத்து வரும் ஜெத்தா தமிழ்ச் சங்கம், ஏற்கனவே திட்டமிட்டபடி உழைப்பாளர் தினத்தை ஒட்டி கடந்த ஏப்ரல் 29 & 30 தேதிகளில் ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் ஒரு அங்கமான கலாம் இளந்தளிர் இயக்கம் மற்றும் சென்னையின் முகை அமைப்பு என அனைவரது கூட்டு முயற்சியால் சென்னை கிரீன் சிட்டி அயப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் 150 மரக்கன்றுகள் வெற்றிகரமாக நடப்பட்டு, கூண்டு பொருத்தி, நீர் பாய்ச்சும் பணியை சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.
இந்த செயலை செய்வதற்கு பொருள் உதவியாகவும், உடல் உழைப்பாகவும் பங்களிப்பு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் தன்னார்வ குழு சார்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்.

முகை அமைப்பு, கலாமின் இளந்தளிர் இயக்கம் & ஜெத்தா தமிழ்ச் சங்கம்
Comments