
ஜித்தா புறநகர் கும்ரா என்ற பகுதியில் வீட்டு டிரைவராக பணிபுரிந்து வந்த காரைக்காலை சேர்ந்த லூயிஸ் என்பவர் கடந்த 13-1-25 அன்று மரணமடைந்ததாகவும் அவர் உடலை தாயகத்திற்கு பெற்று தருமாறு தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காரைக்கால் அ.ராஜா முஹம்மதுவிற்கு லூயிஸின் மனைவி மற்றும் குடும்பத்தினர்கள் கோரிக்கை வைத்தனர்.

உடனடியாக தமுமுகவின் அயலக அணியான இந்தியன்ஸ் வெல்ஃபெர் ஃபோரம் ஜித்தா சமூக நலத்துறை செயலாளர் செல்வக்கனிக்கு தகவல்
தரப்பட்டு, சகோதரர் ஜமீல்தீன் பெயரில் வக்காலா எடுக்கப்பட்டு IWF ஜித்தா மண்டல தலைவர் அப்துல் மஜித் மற்றும் ஜமீல்தீன் ஆகியோர் அனைத்து ஆவண வேலைகளையும் முடித்து கடந்த 12-02-25 தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தமுமுக தலைமை செயற்குழு உறுப்பினர் காரைக்கால் அ.ராஜா முஹம்மது
சென்னை விமான நிலையத்தில்
லூயிஸின் பிரேதத்தை பெற்று தமுமுக மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் கலீல் ரஹ்மான் ஆலோசனையோடு சென்னை அண்ணா நகர் தமுமுக ஆம்புலன்ஸில் காரைக்கால் கொண்டு சென்று குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த மகத்தான முயற்சியில் IWF ஜித்தா மண்டல நிர்வாகிகள் கீழை இர்பான், பனங்காட்டூர் அப்துல் ஹலீம், முகவை அப்துல் சமத், அஹ்மத் பஷீர், மங்களகுடி தாஹா ரசூல் மற்றும் சகோ ஜமீல்தீன் ஆகியோர்கள் ஒன்று சேர இங்குள்ள அனைத்து செலவுகளையும் லூயிஸின் கபீல் ஏற்றுகொண்டார்.
மேலும் தமுமுக காரைக்கால் மாவட்ட தலைவர் I.அப்துல் ரஹீம், தமுமுக மருத்துவ சேவை அணி செயலாளர் D.அப்துல் ரஹ்மான், காஜா மைதீன், ரியாத் NRT பொறுப்பாளர் சந்தோஷ், அப்ஹா மருத்துவர் நூஹ், மதீனா அஸ்ரப் ஆகியோர்கள் அவ்வப்போது தொடர்பில் இருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
கடல் கடந்து சென்றாலும் உதவிக்கரம் கொடுக்கும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரத்திற்கு லூயிஸின் குடும்பத்தார் நன்றிகளை தெரிவித்தனர்.
தகவல்:
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்,
(தமுமுகவின் அயலக அணி)
ஜித்தா மேற்கு மண்டலம்.
அன்புடன் M.Siraj
Comments