ஜெத்தாவில் உள்ள இந்திய பன்னாட்டு பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினராக பேராசிரியர் முனை. சுபைர் ஹமீது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டில் சேலம் பகுதியைச் சேர்ந்தவர். தற்போது ஜெத்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கழகத்தில் (KAU) பொறியியல் துறையில் இணை பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது முனைவர் மற்றும் முதுகலை பட்டங்கள் திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பெற்றவர். இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பு சேலத்தில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துள்ளார்.
அவர் தொழில் துறையில் 4 ஆண்டு கால அனுபவம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். KAU இல் சேருவதற்கு முன்பு, சேலத்தில் உள்ள நாலெட்ஜ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
சக மதிப்பாய்வு செய்யப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி இதழ்களில் சுமார் 54 தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கட்டுரைகளும், சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்களில் 40 கட்டுரைகளையும் அவர் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் புகழ்பெற்ற ISTE இன் வாழ்நாள் உறுப்பினர் ஆவார். மேலும் அவர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் சார்பில் இளம் பொறியாளர் விருதும், சிறந்த ஆராய்ச்சியாளர் விருதும் பெற்றவர். மட்டுமன்றி சிறந்த ஆசிரியர் விருது மற்றும் சிறந்த ஆராய்ச்சித் திட்ட விருதும் பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்.
மேலும் அவர், பின்வரும் ஆராய்ச்சிப் பிரிவுகளான உற்பத்தி, ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், சுகாதாரத் துறையில் தரம், செயல்திறன் அளவீட்டு, பாதுகாப்பு, உகப்பாக்கம், முடிவெடுத்தல், தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலி மேலாண்மை, உற்பத்தி பொறியியல் மற்றும் நிர்வாகத்தின் பரந்த பகுதிகளில் ஆராய்ச்சியில் திறம்பட ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு ஜெத்தாவில் வசிக்கும் தமிழர்கள் உட்பட அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அன்புடன் M.Siraj
Comentarios