ஜித்தா கால்பந்து அகாடமி (JSC) ஜூன் 11 ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தை வெகு விமர்சையாக ஜித்தாவில் நடத்தியது.
இந்திய துணைத் தூதரகத்தின் Welfare Consul திரு.முகமத் ஹாசிம் யோக நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில் ஜித்தா கால்பந்து அகாடமின் (JSC) முன்னெடுப்புகளை வெகுவாக பாராட்டினார். அதிகமான இந்தியர்கள் இந்தியர்களுடன் வெளிநாட்டினரும் ஆவலுடன் பங்கெடுத்த இந்த நிகழ்வில் அதன் அமைப்பர்களின் ஒருவரான திரு ஸ்ரீஜித் பேசுகையில் யோகா ஒரு உடற்பயிற்சி மட்டுமல்ல, இது ஒரு வாழ்க்கை முறை என்றும் ஆரோக்கியமான உடல் மற்றும் தூய மனதை நிலை நிலை நிறுத்துவதற்கும் நம்மை சுற்றி ஒரு அபரிதமான ஆற்றலை உருவாக்குவதற்கும் யோகா மிக அவசியம் என்று கூறினார்.
உடலின் பலவீனமான பகுதிகள் வலுவடைய செய்யும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தைகட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும் ரத்தத்தில் உள்ளகொழுப்பைகரைக்கவும் உளவியல்ரீதியாகமன அழுத்தத்தைகட்டுப்படுத்தவும் யோகாவால் முடியும் என்றும் யோகாவில் கலந்து கொண்ட சமூக சேவகர் திரு.நசீர் வாவா குஞ்சு எடுத்துரைத்தார்.
வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி அதன் அமைப்பாளர்கள் நிகழ்வை முடித்தனர்.
Comments