
ஜித்தா தமிழ் சங்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் இந்திய பன்னாட்டு பள்ளி ஆசிரியை குரு திருமதி புஷ்பா சுரேஷ் அவர்களின் நடனம் கலாக்ஷேத்ரா குழுவின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜூலை 14 அன்று தமிழ்நாடு சிதம்பரத்தில் அரங்கேறியது. அதில் ஜித்தா தமிழ்ச்சங்கத்தின் 5 குழந்தைகள் மட்டுமல்லாமல் நமது அண்டைய கேரள மாநிலத்தின் இருந்து 4 குழந்தைகளும் அரங்கேற்றம் நடத்தினார்கள்.
கனகவர் உடைகளுடன் நிகரற்ற திறமையுடன் ஐஷ்வர்யா ஜனார்தனி ஜெய் ஷங்கர், ரிஷா மருதப்பா, சுவேதா பிரேம்நாத், தனுஸ்ரீ சுப்ரமணியன், ஆண்ட்ரியா லிசா ஷிபு, மேகா சஞ்சீவ், கௌரி மேனன், வர்ஷன் ராஜா, சம்ரிதி சுனில் ஆகியோர் நடனம் தங்கள் குரு திருமதி புஷ்பா சுரேஷ் அவர்களின் அபார பயிற்சி திறமையை எடுத்துக் காட்டும் விதமாக இருந்தது.
சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழகம் இசை துறை,இசை மாமணி, இசை செல்வமணி டாக்டர் ஆர் கே குமார் மற்றும் ஜித்தா வாழ் இந்தியர்களுக்கு மிகவும் பரிச்சயமானவரும் ஓய்வு பெற்ற சூடான் நாட்டு இந்திய தூதரக அதிகாரி திரு மூர்த்தி, இந்திய பன்னாட்டு பள்ளி ஜித்தா தலைமை ஆசிரியை திருமதி பராஹ் மசூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நகர பிரமுகர்கள் மதிப்புக்குரிய திரு சுந்தர், திரு பனிமலர் ரமேஷ் , திரு சேகர் மற்றும் பாபநாசம் ஒன்றிய குழு உறுப்பினர் திரு ராம விஜயன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியை செல்வி காவியா சுரேஷ் கிருஷ்ணன் தொகுத்து வழங்க, ஜித்தா தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு ஜெய் ஷங்கர் வரவேற்புரை வழங்க, இந்திய பன்னாட்டு பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் திருமதி ஹேமலதா குரு திருமதி புஷ்பா சுரேஷை அவர்களை அறிமுகம் செய்ய, ஜித்தா தமிழ் சங்க உறுப்பினர் திரு மருதப்பா நன்றியுரை வழங்க அமர்க்களமாக நடந்த நிகழ்வில் திரு புஷ்பா சுரேஷ் அவர்களுக்கு 25 வருடம் நிறைவு பெற்றதற்கும் சவூதி அரேபியா ஜித்தா நகரில் மாணவிகளுக்கு பயிற்சி அளித்து, இதுவரை 10 க்கும் மேல் அரங்கேற்றம் நடத்தியமைக்கு பாராட்டும் விதமாக
"பரதக்கலா சேவாரத்னா"
என்ற விருது குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொது சமூகத்தின் சார்பாக வழங்கப்பட்டது.
நமது அண்டை மாநிலத்தின் இருந்து பங்கேற்ற குழந்தைகளின் பெற்றோர் திரு சுதீர், திரு ஷிபு, திரு சஜீவ், Dr சுனில் மற்றும் ஜித்தா தமிழ்ச் சங்க உறுப்பினர் திரு சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சிகளின் ஏற்பாடுகளை கவனித்து கொண்டனர்.ஜித்தா தமிழ் சங்கத்தின் ஏராளமான உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
Comments