ஜித்தாவில் கலாச்சார விழாக்களில் முக்கிய பங்காற்றியவரும் கேரளா பையனூர் பூர்வீகம் என்றிருந்தாலும் பல வருடங்களாக சென்னை வாசியான திரு சுரேஷ் காலமானார். தனது மகனின் திருமண விஷயமாக ஜித்தாவிலிருந்து சென்னை வந்தபோது பாலக்காட்டில் உள்ள கோவிலுக்கு செல்லும் வழியில் மாரடைப்பால் உயிர் இழந்தார்.
ஜித்தாவில் நடக்கும் பல கலை நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் பங்கெடுக்கும் திரு.சுரேஷ் அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர். இவரது மனைவி புஷ்பா சுரேஷ் பிரமுகா நடனக் கலைஞராகவும், ஜித்தாவில் இருக்கும் இந்திய பன்னாட்டு பள்ளியில் ஆசிரியை ஆகவும் பணி ஆற்றி வருகிறார்.
Comments