top of page
Writer's pictureRaceTamil News

பிரபல மருத்துவருக்கு ஜித்தா சமூகத்தின் பிரியாவிடை

ஜெத்தாவில் பல வருடங்களாக சிறந்த முறையில் மருத்துவ சேவை செய்து மக்களின் ஆதரவு பெற்ற மருத்துவர் பி கே தினேஷ் அவர்களுக்கு கேரள பொது சமூகம் பிரியாவிடை அளித்து கௌவரிக்கப்பட்டார்.


தனது தொழில் மற்றும் மருத்துவப் பயிற்சியை, தன்னே நாடி வரும் நோயாளிகளுக்கு மிகவும் ஆறுதலாக உகந்த பராமரிப்பாக மாற்றியதன் மூலம், மக்களின் ஆதரவை தக்க வைத்துக்கொண்டவர் தாயகம் திரும்பும் பொது மருத்துவர் பி.கே.தினேஷ் என்று ஜித்தா சமூகத்தினர் புகழாரம் சூட்டினர்..

கேரளாவின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்வில் ஜெத்தா பௌராவளி தலைவர் கபீர் கொண்டோட்டி தலைமை தாங்க , பொது அழைப்பாளர் மன்சூர் வயநாடு வரவேற்க்க, பொருளாளர் ஷெரீப் அரக்கல் நன்றி கூறினார்.


மாவட்ட பிரதிநிதிகளாக ரஃபி பீமாபள்ளி (திருவனந்தபுரம்), சஜித் ஏ மஜீத் (கொல்லம்), நசீர் வவகுஞ்சி (ஆலப்புழா) ஃபாசில் (இடுக்கி), அடூர் விலாஸ் (பத்தனம்திட்டா) உன்னி தெக்கெடத் (திருச்சூர்), சுபைர் ஆலுவா (எரணாகுளம்), ஜலீல் கண்ணமங்கலம் (மலப்புரம்), கஃபூர் அம்பலவயல் (வயநாடு), ஹிஃப்சு ரஹ்மான் (கோழிக்கோடு), ராதாகிருஷ்ணன் கவும்பை (கண்ணூர்), சிஎச் பஷீர் (காசர்கோட்),அட்வ.பஷீர் அப்பாக்கடன், (பாலக்காடு), கஃபூர் அம்பலவயல் (வயநாடு), பிரசூன் திவாகரன் (கோட்டயம்), நாசர் வெளியம்கோட் (KMCC), அஷாப் வர்கலா (OICC), அட்வ.ஷம்சுதீன் (நவோதயா), அலி முஹம்மது அலி (JNH), பிஜு ராமந்தலி (ஊடகதுறை ) உமர் பாரூக் (வெளிநாட்டவர் நல மன்றம்) மற்றும் பிரபல ஊடகவியலாளர் முசாபர் எளம்குளம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.


டாக்டர் தினேஷிடம் கபீர் கொண்டோட்டி ஜித்தா கேரளப் பௌரவளியின் வாழ்த்துப் சான்று வழங்கினார்.


விழாவையொட்டி நடைபெற்ற கலாச்சார இரவில் சோபியா சுனில், மிர்சா ஷெரீப், அஃப்ரா ரஃபி, மும்தாஜ் அப்து ரஹ்மான், சிமி அப்துல் காதர், சுவிஜா சத்யன், இஸ்மாயில் இஜ்லு, ரஃபி ஆலுவா ஆகியோர் பாடல்களைப் பாடினர்.


தன்னலமற்ற சேவையின் உறுதிமொழியை எடுத்துக்கொண்ட அனைத்து மருத்துவர்களுக்கும், நோயாளிக்கு அன்பான பராமரிப்பே அவர்களின் தொழிலின் அடிப்படை மருத்துவர் தினேஷ் தெளிவுபடுத்தினார்.


தனது ஜெத்தா வாழ்க்கையில் கிடைக்கப்பெற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்தார்.

அலி தெக்குதோட், நவாஸ் தங்கல், கொய்சான் பீரன்குட்டி, அப்துல் காதர் ஆலுவா, வேணு அந்திக்காடு, நாசர் சாவக்காடு ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சியை வடிவமைத்தனர்

அன்புடன் M. Siraj

150 views0 comments

Comments


bottom of page