
திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் வசிக்கும் ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் இந்த வருடம் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி நஜுமுதீன் மற்றும் முனைவர் பாசில் இருவருக்கும் ஜெத்தாவில் மிக உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹாஜி காஜா நஜுமுதீன் அவர்களுக்கு முன்னாள் மாணவர் திரு. இஜாஸ் அஹமது பூங்கொத்து கொடுத்தும், முனைவர் பாசில் அவர்களுக்கு திரு.மூர்த்தி மற்றும் ராமானுஜம் இருவரும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். தொடர்ந்து இஜாஸ் அவர்கள் வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.



கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி நஜுமுதீன் அவர்கள் பேசுகையில் கல்லூரியின் வளர்ச்சி, தற்போது வழங்கப்படும் புதிய படிப்புகள், கல்லூரியின் முன்னேற்றத்தில் முன்னாள் மாணவர்களின் முக்கிய பங்கு ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இறுதியாக மாணவர்களின் கேள்விகளுக்கு கல்லூரியின் ஹாஜி முனைவர் பாசில் அவர்கள் பதில் அளித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இந்த சந்திப்பு நிகழ்வினை திரு. இஜாஸ் அஹமத் வெகு நேர்த்தியாக நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
அன்புடன் சிராஜ்
எங்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து அமீரகம் சவுதி குவைத் ஓமன் பஹ்ரைன் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள் https://whatsapp.com/channel/0029VaDyDs0DzgT4vRhiAb16
Comments