
கடந்த 21-07-24 அன்று அஜீஸியா ஸ்பைஸிஸ் உணவகத்தில் டீம் இந்தியா ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் தமுமுகவின் அயலக பிரிவான இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) சார்பாக ஜித்தா மண்டல தலைவர் அப்துல் மஜீத் மற்றும் மண்டல துணை செயலாளர் நீடூர் ரில்வான் கலந்து கொண்டனர்.
கடந்த ஹஜ்ஜில் தமிழக ஹாஜிகளுக்கு ஏற்பட்ட குறைபாடுகளையும் கஷ்டங்களையும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டது.
வரும் ஆண்டில் அனைத்து குறைகளையும் சரி செய்யும் வண்ணம் முன்கூட்டியே திட்டங்களை வகுத்து செயல்பட IWF சார்பாக வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக தகுதியானவர்களை மட்டும் காதிமுல் ஹஜ்ஜாஜ் ஆக நியமனம்
செய்யவும் வலியுறுத்தப்பட்டது.
அனைத்தையும் சரி செய்யும் வண்ணம் விரைவில் அடுத்த ஹஜ்ஜுக்கான பணிகளை துவக்க விருப்பதாக டீம் இந்தியா தலைவர் அய்யுப் உறுதியளித்தார்.
இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் ஹஜ் தன்னார்வ அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.
அன்புடன் சிராஜ்
Comments