
கடந்த சில மாதங்களுக்கு முன் மயிலாடுதுறை மாவட்ட கிராமத்தை சேர்ந்த சகோதர சமுதாய தமிழர் ஜித்தாவில் காணாமல் போய் விட்டதை அறிந்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்* ஜித்தா மண்டல மருத்துவ அணி செயலாளர் தாஹா அவர்கள் பல இடங்களில் தேடி இறுதியில் கண்டு பிடித்து பல நாட்கள் உணவு வழங்கி பராமரித்து வந்தார்.
தொடர்ந்து அந்த நபர் வேலை செய்த கம்பெனியில் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு எக்சிட் அடித்து விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். சில மணி நேரம் கழித்து விமானத்தை தவற விட்டு விட்டதாக விமான நிலைய அலுவலகத்தில் இருந்து தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு சென்ற IWF மண்டல தலைவர் அப்துல் மஜீத் விமான நிலைய அதிகாரிகளிடம் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பின் ஏர்லைன்ஸ் ஒப்புதல் பெறப்பட்டு கேரளாவிற்கு புறப்பட தயாராக இருந்த அடுத்த விமானத்தில் ஏற்றப்பட்டு கோழிக்கோட்டில் இறங்கி தனது தந்தையுடன் தனது ஊருக்கு சென்றடைந்தார்.
இந்த முயற்சியில் ஆரம்பம் முதலே IWF மண்டல நிர்வாகிகள் கீழை இர்பான், பஷீர், ரில்வான்,செல்வக்கனி, நாசர், மற்றும் கும்ரா கிளை நிர்வாகிகள் அனைத்து விஷயங்களையும் மிகப் பொறுப்பாக கவனித்து கொண்டனர். தனது மகன் கிடைத்தவுடன் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம், ஜித்தா மேற்கு மண்டல நிர்வாகிகளுக்கு மிக உருக்கமாக நெஞ்சம் நிறைந்த நன்றிகள் அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
அன்புடன் சிராஜ்.
Comments