
கடந்த 31-08-24 அன்று ஜித்தா பன்னாட்டு பள்ளி அரங்கில் புதிதாக பொறுப்பேற்றுள்ள
மதிப்பிற்குரிய இந்தியன் கவுன்சில் ஜெனரல் பஹத் கான் சூரி அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்திய அமைப்புகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் IWF ஜித்தா மண்டல தலைவர் காரைக்கால் அப்துல் மஜித், துணை தலைவர் முகவை அப்துல் சமத், துணை செயலாளர்கள் பொறியாளர் அப்துல் ஹலீம் மற்றும் செய்யத் இஸ்மாயில் கலந்து கொண்டு கவுன்சில் ஜெனரலுக்கு வாழ்த்து மடல் வழங்கி கீழ்கண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர்.

1. ஹிந்தி மற்றும் உருது தெரியாத தமிழக ஹாஜிகளுக்கு தமிழில் அறிவிப்பு போஸ்டரும், தங்கும் பில்டிங்களில் தமிழ் மொழியில் பேசும் ஒருவரும் பணியில் இருக்க வேண்டும்.
2. ஜித்தா தூதரகத்தில் வரும் அலுவலக பணிகளில் தமிழர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும்
3. மதினா மற்றும் யான்புவில் இந்திய பன்னாட்டு பள்ளி அமைக்க பட வேண்டும்.
4. குறைந்த சம்பளம் வாங்கும் இந்தியர்களின் பிள்ளைகளுக்கு ஜித்தா இந்திய பன்னாட்டு பள்ளியில் அட்மிஷன் மற்றும் கட்டிட நிதிகளில் இருந்து 50% தள்ளுபடி செய்ய வேண்டும்.
5. சவுதியில் பணியில் இறந்த இந்தியருக்கு சேர வேண்டிய பணத்தை அவர்களது நிறுவனத்தில் இருந்து அவர்களது குடும்பத்திற்கு விரைந்து பெற்று தர வேண்டும்.

இந்நிகழ்வில் JTS மூத்த நிர்வாகி சிராஜ் நன்றியுரையாற்றினார். மேலும் JTS பொறியாளர் காஜா மைதீன், மருத்துவர் அஹ்மத் பாஷா, ரமணா, தாதாபாய் அபூபக்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தகவல்:
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)
(தமுமுகவின் அயலக பிரிவு)
ஜித்தா மேற்கு மண்டலம்,
சவூதி அரேபியா.
அன்புடன் M.சிராஜ்
Comentários