இந்தியன்ஸ் வெல்ஃபர் ஃபோரம், ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜித்தாவின் புறநகர்ப் பகுதியான கும்ராவில் முதல் NRT அடையாள அட்டை இலவசப் பதிவு முகாமை ஏற்பாடு செய்தது.
இதற்கு முன் நான்கு முகாம்களை
ஆகஸ்ட் 1 ல் கும்ராவில் தொடங்கி
இரண்டாவது ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜித்தா நகரிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள அல் பராக்கா மாவட்டத்திலும், மூன்றாவதாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஷரஃபியாவில் உள்ள அபீர் மருத்துவமனையிலும், நான்காவது ஆகஸ்ட் 11 ஆம் தேதி பைசாலியாவிலும் நடத்தி நூற்றுக்கணக்கான தமிழர்களுக்கு
இலவச அடையாள அட்டை பதிவு செய்து கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இது தவிர மக்கா, மதீனா, யான்பு, அப்ஹா, புரைதா, தம்மாம், ரியாத் ஆகிய இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த சேவைகளை மண்டல நிர்வாகிகள் அப்துல் மஜீத், பொறியாளர் கீழை இர்ப்பான், பொறியாளர் அப்துல் ஹலீம், பேராசிரியர் சையத் இஸ்மாயில், பொறியாளர் நீடூர் ரில்வான், அஸ்ரப், தாஹா, அஹ்மத் பஷிர் ஆகியோர் பதிவு செய்து கொடுத்தனர்.
கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சவூதியில் தமிழ் சமூகத்திற்கு பல்வேறு சேவைகளை வழங்குவதில் IWF முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்புடன் M.சிராஜ்
Comments