
தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினம் சேர்ந்த ராமையா என்பவர் சில மாதங்களுக்கு முன் துபா துறைமுகத்திற்கு வேலைக்கு சென்ற இடத்தில் இறந்து விட்டதாகவும் அவர் உடலை ஊருக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படுவதால் உதவி செய்யும் படி ஜித்தா துறைமுகத்தில் பணி செய்யும் சகோ. அப்துல் ரஹ்மான் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ஜித்தா மண்டல தலைவர் அப்துல் மஜீத் இடம் கேட்டுக்கொண்டார்.

உடனடியாக IWF ஜித்தா மண்டல PRO அஹ்மத் பஷீர், பொருளாளர் மற்றும் பொறியாளர் நாசர் பல்வேறு கட்ட தொடர் முயற்சிக்கு பின் ராமையா உடல் விமானத்தில் தாயகம் அனுப்பப்பட்டு அவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
தகவல் கிடைத்ததும் துரிதமாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்த இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF), ஜித்தா மேற்கு மண்டல நிர்வாகிகளுக்கு மறைந்த ராமையாவின் குடும்பத்தார் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
அன்புடன் சிராஜ்
Comentários