20-8-24 இரவு 11 மணியளவில் ராஜகிரியை சேர்ந்த சகோதரருக்கு ஜெத்தாவில் அவசரமாக இரத்தம் தேவைப்பட்டதால் வாட்ஸ்அப் குழுமங்கள் மூலம் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.
21-8-24 மதியம் 2 மணிக்குள் பல்வேறு பகுதிகளில் இருந்து நம் சகோதரர்கள் தன் குருதிகளை கொடையாக தந்து உதவினார்கள்.
முதல் நபராக பிளேட்லட் இரத்தம் கொடுத்த IWF விழி துணை செயலாளர் பேராசிரியர் சையத் இஸ்மாயில் மற்றும் கொடையாளர்கள், தொடர்ந்து பல வகைகளில் உதவியவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை நிர்வாகிகள் தெரிவித்துக் கொண்டார்கள்.
மிகவும் துரித கதியில் செயல்பட்டு இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் IWF ஜித்தா மண்டல துணை செயலாளர் பொறியாளர் அப்துல் ஹலீம் சிறப்பாக செய்து முடித்தார்.
தகவல்:
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)
(தமுமுகவின் அயலக பிரிவு)
ஜித்தா மேற்கு மண்டலம்,
சவூதி அரேபியா.
அன்புடன் M.சிராஜ்
Comments