top of page

கடல் கடந்து சென்றாலும் உதவிக்கரம் கொடுக்கும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்

Writer's picture: RaceTamil NewsRaceTamil News

கடந்த 24.01.2026 அன்று தாயகத்தில் இருந்து உம்ரா வந்த நாகை மாவட்டம் வவ்வாலடி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் தாயிஃப் அருகே வாகன விபத்துக்கு உள்ளாகி இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்,

(தமுமுகவின் அயலக அணி)

ஜித்தா மேற்கு மண்டலம் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தத்தின் தொடர்ச்சியாக தாயிஃப் மருத்துவமனை சிகிச்சைக்கு பின் கடந்த (31-1-25) தாயகம் புறப்பட்டு சென்றனர்.


IWF ஜித்தா மண்டல நிர்வாகிகள் பொறியாளர் KPM அப்துல் ஹலீம் மற்றும் தாஹா ரசூல் ஆகியோர் விபத்து ஏற்பட்ட நாள் மருத்துவமனை முதல் விமான நிலையம் வரை அனைத்து உதவிகளும் செய்தனர்.


மேலும் சென்னை விமான நிலையத்திலிருந்து திருவாரூர் மருத்துவமனை வரை செல்ல தமுமுகவின் ஆம்புலன்ஸ் ஏற்பாடும் செய்து கொடுத்தார்கள். மொழி தெரியாத இடத்தில் நடந்த விபத்தில் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை உடனிருந்து சேவை செய்த IWF நிர்வாகிகளுக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

அன்புடன் M.Siraj

20 views0 comments

Comments


bottom of page