
உம்ரா பயணமாக சவுதி அரேபியாவிற்க்கு வருகை தந்திருக்கும் தமிழ்நாட்டின் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்களை புனித மக்கா நகரில் இந்தியன் வெல்ஃபேர் பாரம் சார்பாக சவுதி மண்டல ஒருங்கிணைப்பாளர் மீமிசல் நூர் முகம்மது அவர்களும் ஜித்தா மேற்கு மண்டல செயலாளர் கீழை இர்பான் அவர்களும் சந்தித்து பேசினார்கள்.

இந்தியன் வெல்பர் ஃபோரம் சவுதி அரேபியாவில் வெளிநாட்டு வாழ் மக்களுக்கு செய்து வரும் சேவை குறித்தும் தமிழகத்திலிருந்து வருகை தரும் ஹாஜிகளுக்கு ஒருங்கிணைந்த சவுதி அரேபியா மண்டலங்களின் மூலம் செய்யப்பட்டு வரும் சேவைகள் குறித்தும் தெரியப்படுத்திய போது அமைச்சர் அவர்கள் இது மிகப்பெரிய பாக்கியம் என்று கூறி உற்சாகப்படுத்தியதோடு நானும் விமான நிலையங்களில் சக்கர நாற்காலியில் வரும் ஹாஜிகளை சிறிது தூரம் தள்ளி அவர்களை வழி அனுப்புவேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு அரசு செய்ய வேண்டிய பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகளை இச்சந்திப்பு மூலம் அமைச்சர் அவர்களிடம் எடுத்துச் சொல்லப்பட்டது இது குறித்து கேட்டறிந்த அமைச்சர் அவர்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெறக்கூடிய துறை ரீதியான கூட்டங்களில் இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் மொழிபெயர்த்த ரியா என்னும் மறைவான இணைவைப்பு என்ற புத்தகமும் இஸ்லாத்தை அறிந்து கொள்வோம் என்ற புத்தகமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் அவர்களின் துணைவியார் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர் தமுமுக நிறுவனர் குணங்குடி ஹனிபா அத்தா அவர்கள் நலம் விசாரித்தது குறித்து தெரிவித்த போது அமைச்சர் அவர்கள் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதிகாலை தொழுகைக்கு பிறகு புனித தளத்தில் நடைபெற்ற சந்திப்பு மிகுந்த மன நிறைவாக இருந்தது என்று சொன்னால் மிகை இல்லை.
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)
(தமுமுகவின் வெளிநாட்டு பிரிவு)
ஜித்தா மேற்கு மண்டலம்,
சவூதி அரேபியா.
Comentários