
ஜெத்தா: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 2, 2024 அன்று, ஜெத்தாவில் இந்திய துணை தூதுவராக பணிபுரிந்த முகமது ஷாஹித் ஆலம் அவர்களுக்கு அன்பான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பிரியாவிடை அளிக்க ஜெத்தாவில் இந்திய சமூகம் ஒன்று கூடியது. இது ஒரு இதயப்பூர்வமான மற்றும் அன்பு சிற்றுரைகளாலும் ஒரு மறக்க முடியாத நிகழ்வாக இருந்தது. ஜெத்தாவில் உள்ள பல்வேறு இந்திய சமூகங்களின் அசைக்க முடியாத ஆதரவு மற்றும் ஒற்றுமையால் இந்த பிரமாண்டமான விடை பெறும் நிகழ்வு சாத்தியமாயிற்று. ஒவ்வொரு சமூக உறுப்பினரும் மகத்தான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி மதிப்பிற்குரிய கான்சல் ஜெனரல் ஷாஹித் ஆலம் அவர்களே பரவசப்படுத்தினர்.

தமிழ்நாட்டின் அமைப்புகளான
1 ஜெத்தா தமிழ்ச்சங்கம் (JTS)
2 செந்தமிழ் நல மன்றம் ((SNM)
3 இந்தியன் வெல் பெயர் பாரம் (IWF)
4 நான் ரெசிடென்ட் தமிழ் இந்தியன் அஸோஸியேஷன் (NRTIA)

முக்கிய அங்கத்தினர் கலந்து கொண்டு துணை தூதர் இங்கு வசிக்கும் தமிழர்களுக்கு என்னென்ன உதவிகள் மேற்கொண்டார் என்பதை ஜெத்தா தமிழ் சங்கம் நிர்வாக உறுப்பினர் சிராஜ் அவர்கள் பட்டியலிட்டார்.

தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் கான்சல் ஜெனரல் ஆலம் எடுத்த முயற்சிகளுக்கு சமூக தலைவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய கான்சல் ஜெனரல் ஷாஹித் ஆலம், பொது வாழ்வில் என்ஆர்ஐ சமூகத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தினார், ஒரு பொது நோக்கத்திற்காக நாம் ஒன்றிணைந்தால், குறிப்பிடத்தக்க பல விஷயங்களை சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக விளங்கும் ஜெத்தாவில் வசிக்கும் இந்திய சமூகம் மற்றவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று துணை தூதுவர் தனது உரையில் நன்றியுடன் கூறினார்.
இந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் ஒன்றினைத்தந்தது , ஜெத்தாவில் இந்திய சமூகத்தால் நடத்தப்பட்ட முதல் பிரியாவிடை நிகழ்வாக இருந்தது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று வந்திருந்த அனைவரும் கூறினர்.
அன்புடன் M. சிராஜ்
இது போன்ற வளைகுடா நாட்டின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Race Tamil News ( WhatsApp channel ) இணைந்து கொள்ளுங்கள்.
Comments