ஜெத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிகழ்ந்த இந்திய - சவுதி விழாவின் தொடக்க அமர்வில் நூற்றுக்கணக்கான சவுதிகள் உட்பட ஏறத்தாழ 5000 பேர் கலந்து கொண்டு 5000 ஆண்டு கால அரபு - இந்தியா நட்பைக் கொண்டாடினர்.
இந்த மாபெரும் அமர்வில் சுமார் 200 சவுதி மற்றும் இந்திய கலைஞர்கள் பங்கு கொண்ட கண்கவர் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது. விழா நிகழ்வுற்ற இந்திய பன்னாட்டு பள்ளி அரங்கம் மட்டுமல்லாமல் பள்ளி வளாகம் முழுவதும் கூட்டம் அலைமோதியது.
இந்திய தூதரகம் மற்றும் Goodwill Global Initiative இணைந்து ஏற்பாடு செய்த "5000 ஆண்டு நட்புறவு" என்ற கருப்பொருள் கொண்ட சவுதி இந்தியா விழா சீசன் 1 ல் இந்தியத் துணைத் தூதர் முகமது ஷாகித் ஆலம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தமது தலைமையுரையில், புதிய தலைமுறையினர் அரேபியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான 5000 ஆண்டு கால வரலாறு, கலாச்சாரம் மற்றும் உறவை அறிந்து அதை வருங்கால சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் அவர், தான் ஒரு இந்திய குடிமகனாகவும், இந்தியாவின் துணைத் தூதராகவும், நமது அனைத்து உறவுகளுக்கும் அடித்தளமாக விளங்கும் இந்த நீண்ட கால நட்பு குறித்து தாம் மிகவும் பெருமைப்படுவதாக குறிப்பிட்டார். இன்றளவும் இந்த நட்பினை இந்தியாவும் சவுதி அரேபியாவும் பேணிப் பாதுகாத்து, இருதரப்பு தலைவர்கள் வருகைகள், மற்றும் கருத்து பரிமாற்றத்தின் மூலம் பொருளாதார அளவில் வலுப்பெற்று வருவதாக குறிப்பிட்டார்.
இத்தகைய பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்ய முன்முயற்சி எடுத்ததற்காக GGI யைப் பாராட்டிய அவர், சவுதிகளின் சாதனைகள் மற்றும் திறமைகளையும், 100 ஆண்டுகளுக்கு முன்னே புலம்பெயர்ந்த இந்தியர்களின் திறமைகள் கொண்டாடவும் முடிவு செய்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் விளக்கினார்.
தொடக்க அமர்வின் சிறப்பு விருந்தினர்களாக துணைத் தூதரின் மனைவி டாக்டர் ஷகீலா ஷாஹித், மக்கா மதரஸா சவுலாத்தியா மேலாளர் ஆதில் ஹம்சா மலபாரி, மலையாளம் நியூஸ் தலைமை ஆசிரியர் தாரிக் மிஷ் காஷ் , அராப் நியூஸ் நிர்வாக ஆசிரியர் சிராஜ் வஹாப், இஃபாத் பல்கலைக்கழகத்தின் டீன் முனைவர் அகிலா சாரிரத்; மற்றும் உம் அல் குரா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் காதீர் தலால் மலபாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாலையில் நடந்த அமர்வில், ஹஜ் கன்சுல் முஹம்மத் அப்துல் ஜலீல், கன்சுல் முஹம்மது ஹாஷிம், அபீர் மருத்துவக் குழுமத்தின் தலைவர் மற்றும் GGIயின் புரவலர் முகமது அலுங்கல், மற்றும் அதவுல்லா ஃபரூக்கி, ஷேக் அப்துர்ரஹிம் மௌலானா, முகமது சயீத் மலபாரி, அப்துல் ரஹ்மான் அப்துல்லா யூசுப், ஐஐஎஸ்ஜே நிர்வாகக்குழு தலைவர் பிரின்ஸ் முப்தி ஜியாவுல் ஹசன், இந்திய பன்னட்டுப்பள்ளி முதல்வர் டாக்டர். முசாபர் ஹசன், கிளஸ்டர் அரேபியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், GGI யின் துணைப் புரவலருமான ரஹீம் பட்டர்கடவன், அப்துல்லா ஹாஷிம் நிறுவனத்தின் பொது மேலாளர் அஜீஸ் உர் ரப், லுலு குழுமத்தின் பிராந்திய இயக்குனர் ரஃபீக் முகமது அலி, IGNOU பிராந்திய மையத்தின் பொது மேலாளர் ரியாஸ் முல்லா, என்.சி. கம்ஃபோர்ட்ஸின் அபுல் லதீப் கப்புங்கல் மற்றும் இன்சாப் நிறுவனத்தின் பொது மேலாளரும் GGI யின் துணைத் தலைவருமான கே. டி. அபுபக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 5,000 ஆண்டு கால அரபு-இந்திய வேர்கள் மற்றும் பாராம்பரிய வழிகள் குறித்த ஒரு வரலாற்று ஆவணப்படம் திரையிடப்பட்டது விழாவின் முக்கிய சிறப்பம்சமாக இருந்தது.
GGI யின் தலைவர் ஹசன் செருப்பா தொடக்க அமர்வுக்கு தலைமை தாங்கினார், பொதுச் செயலாளர் இஷாக் பூந்தோலி நன்றி கூறினார்.
இந்த ஆவண படமானது நட்புறவு என்ற கருப்பொருளுடன், பண்டைய வணிகப் பயணம் எவ்வாறு மசாலா, பட்டு மற்றும் வாசனைப் பொருட்கள் என்ற பாதைகளைக் கடந்து, இந்தியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளை உள்ளடக்கிய உலகின் இரண்டாவது பெரிய புலம்பெயர்வு பாதையில் பயணித்து கூட்டாண்மைக்கான உறவை உயர்த்துவதில் எவ்வாறு உச்சக்கட்டத்தை அடைந்தது என்பதை ஆய்வு பூர்வமாக விளக்குவதாக இருந்தது.
பிரபல கஹூத் இணையம் வழியாக சவுதி இந்தியா உறவுகள் குறித்த கணினி வழி வினாடி வினாவும், GGI யின் துணைப் புரவலர் அசிம் ஜீஷன் நிகழ்த்திய நேரடி வினாடி வினா நிகழ்ச்சியும் அறிவுக்கு விருந்தாக அமைந்தது.
அதே நேரத்தில் இந்திய தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் இந்தோ-அரபு வர்த்தகத்தை வளர்க்கும் இந்திய உணவு வகைகளை காட்சிப்படுத்திய B2C கண்காட்சி மற்றும் உணவுக் கூடங்களின் அரங்கங்களை ஏராளமான மக்கள் பார்வையிட்டனர். அப்துல்லா ஹாஷிம் கம்பெனி, VFS குளோபல், கீ ரென்ட் எ கார், ஹிமாலயா, ஹம்தார்ட் மற்றும் இக்னோ போன்ற முக்கிய சவுதி மற்றும் இந்திய பிராண்டுகள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளைப் காட்சிப்படுத்தின. கண்காட்சியை ஜக்கரியா பிலாடி ஒருங்கிணைத்தார்.
குழந்தைகளுக்காக ஒரு வண்ணம் தீட்டுதல் மற்றும் சுவரொட்டி தயாரிக்கும் போட்டியும் நடத்தப்பட்டது, அங்கு நூற்றுக்கணக்கான சிறுவர்கள் பங்கேற்று தங்கள் படைப்பு திறன்கள் வெளிப்படுத்தினர்.
சுமார் 200 திறமையான அரபு மற்றும் இந்திய கலைஞர்களின் பல்வேறு வகையான அரபு மற்றும் இந்திய பாரம்பரிய நடனங்கள் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
ஃபாதி சாத் அல்-ஹவ்சவி தலைமையிலான 16 உறுப்பினர்களைக் கொண்ட' சவுதுல் மம்லாகா ' சவூதி நாட்டுப்புற நிகழ்த்து கலைக் குழுவின் மயக்கும் நிகழ்ச்சி, சவுதி பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவங்களான பஹ்ரி, மிஸ்மாரி, குபைட்டி, தோசாரி மற்றும் குத்வா ஜானூபியா ஆகியவற்றின் தனித்துவமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.
மேலும், பரதநாட்டியம், குஜராத்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி மற்றும் காஷ்மீர் நடனங்கள், கேரள நடனம் , ஃப்யூஷன் ஒப்பனா, டஃப் முத்து, கோல்களி , ஒப்பனா, வரவேற்பு நடனம், சூஃபி மற்றும் கவாலி நிகழ்ச்சிகள் போன்ற சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் ரசித்தனர். பிரபல பாடகர்கள் ஜமால் பாஷா, முகமது சிக்கந்தர் அலி, மிர்சா ஷெரீப் மற்றும் மும்தாஜ் அப்துரஹ்மான் ஆகியோர் தங்கள் மெல்லிசை பாடல்களால் ஈர்த்தனர்.
நிறைவாக, நிகழ்ச்சிக்கு உதவிய ஆதரவாளர்களான ஃபெனோம் அகாடமி மற்றும் குட் ஹோப் ஆர்ட்ஸ் அகாடமி, நடன இயக்குனர்கள் ரஹ்மத் முஹம்மது அலுங்கல், மிர் கசான்பர் அலி ஜாக்கி மற்றும் கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
ஜலீல் கண்ணமங்கலம், அல்-மூர்த்து, சாதிகாலி துவ்வூர் மற்றும் ஷியாஸ் கலாச்சார நிகழ்ச்சிகள் ஒருங்கிணைத்தனர், கபீர் கொண்டோட்டி, அபு கட்டுபாரா, அருவி மோங்கம், ஏ.எம். அப்துல்லக்குட்டி, நௌஃபால் பாலக்கோத், மற்றும் இப்ராஹிம் ஷாம்நாத் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.
மஜீத் அப்துல்லா அல்-யாசிடி மற்றும் ஹபீபா யாஸ்மினி ஆகியோர் விழாவினை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
அன்புடன் சிராஜ்
댓글