இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மருத்துவ சேவை அணி மற்றும் கிங் சவூத் இரத்த வங்கி இணைந்து “உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” என்ற உன்னத நோக்கோடு, நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வரும் 23.08.2024 வெள்ளிக்கிழமை அன்று ரியாத் சுமைசி மருத்துவமனையில் காலை 09.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடக்க இருப்பதாக நிர்வாகிகள் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
கலந்து கொள்பவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு மற்றும் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல் :
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)
மருத்துவ சேவை அணி மத்திய மண்டலம் ரியாத். சவுதி அரேபியா
அன்புடன் M. சிராஜ்
Comments