
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான
தமிழ்நாடு அரசின் அயலக அடையாள அட்டை இலவச பதிவு முகாம்களை சவூதி அரேபியா முழுவதும் தொடர்ந்து நடத்தி வரும் (IWF) கடந்த 9-8-24 அன்று ஜித்தாவில் மூன்றாவது இலவச முகாமை நகரத்தின் மைய பகுதியான ஷரபியாவில் அபீர் மருத்துவமனை அரங்கில் நடத்தியது.

இதில் ஜெத்தாவின் பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவர்களுக்கும் ஜித்தா IWF நிர்வாகிகளான ரில்வான், அப்துல் ஹலிம், அஹ்மத் பஷிர், செய்யத் இஸ்மாயில், அஸார் ஆகியோர் பதிவு செய்து கொடுத்தனர்.

இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை IWF நிர்வாகிகள் அப்துல் மஜித், அஸ்ரப், தாஹா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனார். மேலும் நிகழ்ச்சியில் JTS, NRTIA, MEPCO நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அன்புடன் M. சிராஜ்
Commentaires