
சவூதி அரேபியாவில் தமிழர்கள் சங்கமித்த இஃப்தார் நிகழ்ச்சி திமுக அயலக அணி சார்பாக சவுதி அரேபியா தென் மண்டல NRTIA வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் நலச் சங்கம், கடந்த 14-4-2023 அன்று மாலை தமிழர்கள் ஒன்று கூடிய இஃப்தார் நிகழ்ச்சியானது கமீஸ் முஷாய்த் சவூதி அரேபியா தாஜ்மஹால் ரெஸ்டாரன்டில் ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் NRTIAவின் சவுதி அரேபியா துணை அமைப்பாளர் திரு கே.முருகதாஸ் அவர்கள் தலைமையிலும் NRTIAவின் தென்மண்டல அமைப்பாளர் முனைவர் ஆனந்த் தேவா துரை அவர்கள் முன்னிலையிலும்
NRTI A வின் கமீஸ் முஷாய்த் ஒருங்கிணைப்பாளர் திரு இஸ்மாயில் திரு கணேஷ்,செயலாளர் திரு சையது தாசில் பொருளாளர் திரு தயா ஜியா அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் திரு கே.முருகதாஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பின் நமது முதல்வர் என்ற தலைப்பில் திரு டேவிட் கமலஹாசன் அவர்கள், சமூக நீதி என்ற தலைப்பில் முனைவர் ராம்குமார் அவர்களும், இன்றைய சட்டசபை என்ற தலைப்பில் திரு சையது தாசில் அவர்களின் சிறப்புரையை தொடர்ந்து அயலகத் தமிழர்கள் தின விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர்கள் ஆற்றிய உரை மற்றும் அயலகத் தமிழர்களுக்கான நலத்திட்டத்தின் தொகுப்பும் மற்றும் கழகத்தின் வழிகாட்டுதலின் படி சவுதி அரேபியா தென் மண்டல NRTIA ஆற்றிய சமுதாய பணிகளை எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்திய சவுதி அரேபியா NRTIA நிர்வாகி திரு பிரேம், மயிலாடுதுறை திரு வெங்கடேசன், திரு ஆரிப்மார்புல், டாக்டர் சந்தோஷ் மற்றும் NRTIA அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்த தோடு சவுதி அரேபியா தென் மண்டல NRTIA வின் சமுதாய பணியையும் பாராட்டி சென்றனர்.



Great achivement