அக்டோபர் 19, 2024 - மிஷ்ரிஃபாவில் உள்ள சீசன்ஸ் ஹோட்டலில் KEF ஜெத்தாவால் ஏற்பாடு செய்யப்பட்டது. "AscendHER" எனும் இந்த நிகழ்ச்சியானது, பெண் பொறியாளர்கள் மற்றும் பெண் வல்லுநர்கள் என பெண்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், இந்நிகழ்ச்சியானது பெண்களின் வளர்ச்சியை ஊக்குவித்தல், அதிகாரமளித்தல், ஒத்துழைப்பு ஆகியவற்றை மற்றும் பகிர்ந்தளிப்பதின் முக்கியத்தை பறைசாற்ற இந்த நிகழ்வு குட் ஹோப் ஆர்ட்ஸ் அகாடமியின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.
"இணைக்கவும், ஒத்துழைக்கவும், வெற்றி பெறவும், ஒன்றாக எழுச்சி பெறுவோம்” என்ற கருப்பொருளுடன், பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகளை ஒருங்கிணைத்து, ஐந்து மணி நேர விவாதங்கள், கேள்வி பதில்கள் மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் பற்றிய ஓர் அலசல் என்று விறுவிறுப்புடன் கூடிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.
பங்கேற்ற பெண்கள் பொறியியல் பின்னணியில் இருந்து மட்டுமன்றி, பலதரப்பட்ட தொழில்முறைத் துறைகளிலிருந்து வந்திருந்தனர். அனைவரும் தங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் ஒருவரையொருவர் உயர்த்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்ற குறிக்கோளால் ஒன்றுபட்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கினர்.
பெண்களால் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு, பெண் தொழில் வல்லுநர்களுக்கு ஆதரவான சூழலில் இணைவதற்கு ஒரு தளத்தை வழங்கியது.
KEF Jeddah வின் இந்த முன்முயற்சி, அனைவராலும் பாராட்டப்பட்டது.
தொழில் முன்னேற்றத்தில் தனித்துவமான நிலையை உருவாக்க பெண்கள் பணியிடத்தில் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகின்றனர். விஜிஷா ஹரிஷ் மற்றும் திவ்யா தனீஷ் ஆகியோர் தொகுத்து வழங்கிய தொடக்க அமர்வுடன் நிகழ்ச்சி பிற்பகல் 3:00 மணிக்கு தொடங்கியது. புகழ்பெற்ற பெண் வல்லுநர்கள் குழுவைச் சேர்ந்த சவுதி மோட்டார்ஸ்போர்ட்டின் பிராண்ட் மேனேஜ்மென்ட் தலைவரான ஆயிஷா நாஜியா, அஜ்னா அன்வர்லால், அல் வாஹா இன்டர்நேஷனல் பள்ளியின் கணித ஆசிரியை, தீஜா அலோரா, சீனியர் ஸ்ட்ரக்ச்சரல் மேலாளர் ஆகியோர் கலந்து கொண்ட InspireHER குழு விவாதம் ஜப்னா ஜலீல் மற்றும் ஆயிஷா ரான்சி ஆகியோரால் நடத்தப்பட்டது. சுர்பானா ஜூரோங் விமான நிலையத் திட்டத்தில் பொறியாளர் மஜிதா கக்கோட்டகட், MnM கட்டிடக் கலைஞர் ஷாஹிரா ஹுசுனு, SimeLabs இல் AI/ML ஆலோசகர்; ஷிம்னா ஷக்கீர், Kenz Group of Schoolsன் CEO; ஸ்வஃபூரா கே, செப்கோவில் ஆரக்கிள் அப்ளிகேஷன்ஸ் நிபுணர் குழு ஆகியோர் உறுப்பினர்கள் தொழில் வாய்ப்புகள் மற்றும் நாட்டின் வளர்ச்சி பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை பகிர்ந்து கொண்டனர்.
சவுதியில் பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி என்று ஷரீனா ஹைர், லிங்கடன் பயிற்சி பட்டறை பற்றிய விரிவான விளக்கத்தை ஆயிஷா நாச்சியாவும் எடுத்துரைத்தனர்.
பெண்களின் தலைமைத்துவத்தின் ஒரு புதிய சகாப்தம் இந்த ஐந்து மணி நேர நிகழ்வு எடுத்துக்காட்டாக இருந்தது. இந்த திட்டத்தை ஒழுங்கமைப்பதிலும், நிர்வகிப்பதிலும் KEF ஜெத்தா நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாத்திமா கே வி மற்றும் விஜிஷா ஹரிஷ் ஆகியோர் சிறப்பாக ஈடுபட்டனர்.
பெண் தொழில் வல்லுநர்களுக்கான தளத்தை உருவாக்குவதிலும் எண்ணற்ற பங்கேற்பாளர்களை ஒருங்கிணைப்பதிலும் இந்த நிகழ்வு ஒரு முத்தாய்ப்பாக அமைந்தது.
அன்புடன் M.Siraj
Commentaires