top of page

கடந்த நான்கு மாதமாக கை கால்கள் செயலிழந்த ஹலிகுல் ஜமான் அவர்களை தாயகம் அனுப்பி வைத்த தமிழக அயலக நலத்துறை NRT & IWF

Writer: RaceTamil NewsRaceTamil News

சவுதி அரேபியா அசீர் மாகாணம் அபஹாவில் பெட்ரோல் பங்கில்( SASCO) வேலை பார்த்து வந்த நாகை மாவட்டம் திட்டச்சேரி சேர்ந்த ஹலிகுல் ஜமான்(56) என்ற சகோதரர் கடந்த 4/11/2024 அன்று மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு (stroke) பக்கவாத நோயால் ( Paralysis) பாதிக்கப்பட்டு அபஹா தனியார் மருத்துவமனையான அபஹா பிரைவேட் ஹாஸ்பிட்டலில் (ABHA PRIVATE INTERNATIONAL HOSPITAL) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு தாயகம் செல்லவிருந்த நிலையில் மருத்துவ செலவுத் தொகையை செலுத்துவதில் சிக்கல் இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் அவரை விடுவிக்க வில்லை.


இதை அவரது மனைவி Indian welfare forum( IWF) மற்றும் தமுமுக நிர்வாகிகள் வாயிலாக தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் சவூதி அரேபியா (NRT) நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.


இதனைத் தொடர்ந்து அசன் ஃபாருக்( IWF Abha)

மருத்துவர். சந்தோஷ் (NRT coordinator Riyadh)

முனைவர் நூஹ் அப்துல்லா ( NRT Abha)

திரு.சிராஜுதீன் ( JTS Jeddah) திரு. இப்ராஹிம் பட்டாம்பி ( CCW Abha) ஆகியோர் ஒருங்கிணைந்து ஜெத்தாவில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளுடன் ஆலோசித்து, மருத்துவ நிர்வாகிகளிடம் மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி. கடந்த 18.02.2025 அன்று ஹலிகுல் ஜமான் அவர்களை அபஹாவிலிருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.


இந்த இக்கட்டான சூழ்நிலையில் திரு. இப்ராஹிம் பட்டாம்பி (CCW) அவர்கள் நோயாளியை மருத்துவமனை யில் இருந்து விடுவிக்க முக்கிய பங்காற்றினார்.


விமானம் ஜித்தா விமான நிலையம் அடைந்த பிறகு நோயாளியின் உடல்நிலை காரணமாக (oyygen குறைபாடு காரணமாக) பயணம் தொடர முடியாத சூழ்நிலை உருவானது.


இதனைத் தொடர்ந்து அவர் ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல்லாஹ் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் திரு.சிராஜ் (JTS) அவர்கள் நோயாளிக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.


கடந்த 22.02.2025 அன்று நோயாளியின் உடல் நிலை பயணிக்க ஏதுவாக இருந்ததால் ஜித்தாவிலிருந்து பெங்களூருக்கு சவூதி அரேபியா விமானத்தில் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.


நோயாளியுடன் அவரது நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் திரு.குமார் முத்துமாணிக்கம் மிகுந்த சிரமத்துக்கிடையில் நன்றாக கவனித்து தாயகம் அழைத்துச் சென்று தாயகத்தில் அவருடைய குடும்பத்தினருடன் ஓப்படைத்த பிறகு இறையருளாள் செயற்பாட்டாளர்களின் நான்கு மாத போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது.


அன்புடன் M. Siraj

 
 
 

Comments


bottom of page