
ஜித்தாவில் சமுதாய சொந்தங்களுடன் நடைபெற்ற பெருநாள் தொழுகை
பல வருடங்களுக்கு பிறகு தமிழ் குத்பா உரை, ஜித்தாவில் மிக சிறப்பாக இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நடத்திய ஈகை பெருநாள் தொழுகையில் 850க்கு மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
இதில் மௌலவி அப்துல் பாசித் புகாரி அவர்கள் இரமலானில் செய்த இபாதத்துகள் போன்று இரமலானுக்கு பிறகும் முஸ்லிம்கள்
செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி குத்பா உரையாற்றினார்.
தொழுகை திடலுக்கு முதலில் வந்த 100 பேர்களில் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு UIC நிறுவனம் சார்பாக அதன் நிறுவன மேலாளர் சகோ. அப்துல் மஜித் பத்ருதீன் அவர்கள் பரிசுகள் வழங்கினார் .
மிக குறுகிய நாளில் ஏற்பாடு செய்தும் நகரத்தை விட்டு 30 நிமிடம்
தூரம் இருந்தும் தொழுகை ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பே
பெரும் திரளில் மக்கள் கூடி தக்பீர் சொல்லியதும் தொழுகை முடிந்து ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்கள் கூறி இனிப்புகள் பரிமாறி கொண்டதும் ஊர் பெருநாளை நினைவுபடுத்தியது.
இந்த பெருநாள் தொழுகை இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) ஜித்தா மேற்கு மண்டலம். வெகு சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.


Comments