top of page

குட் ஹோப் சயின்ஸ் அகாடமி ஜெத்தா - மாணவர்களுக்கான பிரத்யேகமான புதுமையான கற்றல் தீர்வுகளைக் கொண்ட போட்டித் தேர்வு மையம்

Writer: RaceTamil NewsRaceTamil News

சவுதி அரேபியாவின் ஜெத்தாவில்  உள்ள குட் ஹோப் சயின்ஸ் அகாடமி அரசு அங்கீகாரம் பெற்ற  பள்ளி போர்டு தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு சிறப்புக் கல்வி வழங்க உருவாக்கப்பட்ட ஒரு முன்னோடி கல்வி மையமாகும்.

இங்கு, அறிவியல் மற்றும் கணிதத்தில் கவனம் செலுத்தி, 8-12 ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்களுக்கு விரிவான  பாடத்திட்டத்தை கைதேர்ந்த ஆசிரிய நிபுணர் குழுவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.  

குட் ஹோப் சயின்ஸ் அகாடமி 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தங்கள் போர்டு/பள்ளி தேர்வுகள், என்.டி.எஸ்.இ மற்றும் ஒலிம்பியாட்களுக்கு மாணவர்களைத் தயார்படுத்த இலகுவான  பாடத்திட்டத்தை வழங்குகிறது. நீட், ஜே.இ.இ மற்றும் பிற பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சியையும்  வழங்குகிறது. இந்த நிறுவனம், சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் உள்ள மாணவர்களின் முழு திறனையும் வெளிக்கொணர உதவுவதற்காக ஒரு முதன்மை கல்வி மையமாக,  அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களால் இயங்குகிறது.

இது ஒரு கல்வி மையம் என்பதைவிட  மாணவர்கள் தங்கள் கல்விக் கனவுகளை நனவாக்க அனைத்து வகையான வழிகாட்டுதல்,  மற்றும் ஒவ்வொரு மாணவருக்கும் அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கக் கூடிய ஆசிரியர்கள் உதவியுடன்  ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க அவர்களின் முழுத் திறனையும் உபயோகப்படுத்த வழிவகை செய்கிறது. மேலும், தங்கள் பள்ளி வாரியத் தேர்வுகளில் சிறந்து விளங்க உதவும் வகையில், சிறந்த பல்அடுக்கு கல்வி மற்றும்  வெற்றியை நோக்கமாகக் கொண்ட பாடத்திட்டத்தை வழங்குகிறது .


01   NTSE (National Talent Search Examination) கல்வி உதவித்தொகைத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதற்கான பயிற்சி


02 (Olympiads)கணிதம், அறிவியல் போன்ற பாடங்களில் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஒலிம்பியாட்களுக்கு சிறப்பு பயிற்சி


03 NEET (National Eligibility cum Entrance Test) மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகளில் கவனம் செலுத்துதல்


04 JEE (Joint Entrance Examination) பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கான தீவிர பயிற்சி.


 05 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான சிறப்பு பயிற்சி, குட் ஹோப் சயின்ஸ் அகாடமி  மாணவர் மைய அணுகுமுறையின் அடிப்படையில் நடத்துவதுதான்  முதல் குறிக்கோளாக இருக்கும். 


போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குவதில் தீவிரமாக இருக்கும் ஜெத்தா மாணவர்களுக்கு இந்த பயிற்சி மையம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



அன்புடன் M Siraj

 
 
 

Comments


bottom of page