ஜெத்தா இந்திய துணைத் தூதரகம் மற்றும் Goodwill Global Initiative (GGI) இணைந்து சவுதி இந்தியா விழா சீசன் -1 என்ற நிகழ்வை வரும் ஜனவரி 19, 2024 வெள்ளிக்கிழமை அன்று ஜெத்தா இந்திய பன்னாட்டு பள்ளியில் நடத்த உள்ளனர். இந்த நிகழ்வு சவுதி மற்றும் இந்திய நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களை பறைசாற்றும் விதமாகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல சவுதிகள் உட்பட சுமார் 2,000 நபர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய தூதரகத்தின் இணைத் தூதர் திரு. எச்.இ.முகமது ஷாஹித் ஆலம் விழாவிற்கான அழைப்பிதழை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு ஏற்பாடுகளை தொடங்கி வைத்தார். இந்தியாவிற்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த விழா முக்கிய பங்காற்றும் என வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய இந்திய சமூகத்தினர் முழு ஆதரவையும் தர வேண்டும் என்று தூதரக இணைத்தூதர் திரு.ஆலம் அவர்கள் அழைப்பு விடுத்தார்.
இந்த அறிமுக நிகழ்ச்சியில் இந்திய இணை தூதர் ஷாகித் ஆலம் அவர்களுடன் கான்சுல் முகமது ஹாஷிம் மற்றும் கான்சூல் முஹம்மது அப்துல் ஜலீல், ஹசன் செறூப்பா, ஜகரியா பிலாடி, இஷாக் பூண்டோலி, ஜலீல் கண்ணமங்கலம் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்தியாவிற்கும் அரேபியாவிற்கும் இடையிலான வரலாறு, கலாச்சாரம், பொருளாதார உறவுகள், நாகரிக தொடர்புகள் மற்றும் பரிமாற்றங்கள் பற்றிய விபரங்களை விவாதித்து அவற்றை மேலும் வலுப்படுத்துவது இந்த விழாவின் முக்கிய நோக்கமாக இருக்கும் என விழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த விழாவில், 5,000 ஆண்டு கால அரபு-இந்திய பாரம்பரிய தொடர்புகளின் மூல காரணங்களை வேர்கள் ஆராய்ந்து அதனை ஒரு வரலாற்று ஆவணப்படமாக வெளியிடப்படும்.
மேலும், இந்த விழாவில் இந்திய-அரபு வர்த்தகத்தை அதிகரிக்கும் விதமாக .இந்திய தயாரிப்புகள் மற்றும் நிறுவனங்களின் பி2சி கண்காட்சிகள் இடம்பெறும், இந்த கண்காட்சிக்கு சுமார் 5,000 பங்கேற்பாளர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் பொருளாதார பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்த ஒரு மைல்கல்லாக அமையும்.
அன்புடன் சிராஜ்.
Comments