
அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இனி ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கிங் மற்றும் கட்டணம் இலவசம் என்று அபுதாபியின் நகராட்சிகள்மற்றும் போக்குவரத்து ஆணையம் ஆனது தற்போது அறிவித்துள்ளது.
அபுதாபியில் வசிப்பவர்களுக்கு ஜூலை 15 முதல் வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பார்க்கிங் மற்றும் 'தர்ப்' கட்டணத்தைப் பெற முடியும். இந்த முடிவு பீக் ஹவர்ஸின் போக்குவரத்தை மேம்படுத்தவும், எமிரேட்டில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் என்று அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
முன்னதாக, துபாய் புதிய நான்கரை நாள் வேலை வாரத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச பார்க்கிங் அறிவித்தது. அதாவது, முன்பு இருந்ததைப் போல வெள்ளிக்கிழமைகளுக்குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமைகளில் பார்க்கிங் இலவசம் என்று அறிவித்திருந்தது.
இருப்பினும், ஷார்ஜாவில், பார்க்கிங் என்பது சனி முதல் வியாழன் வரை கட்டணச் சேவையாகும், மேலும் நீல நிறத் தகவல் அடையாளங்களைக் கொண்ட மண்டலங்களைத் தவிர அனைத்து மண்டலங்களிலும் வெள்ளிக்கிழமைகளில் இலவசம்.
Comments