top of page

ஜித்தா மாநகரில் NRTIA ஏற்பாடு செய்த இலவச அயலகத் தமிழர் அடையாள அட்டை பதிவு முகாம்

Writer: RaceTamil NewsRaceTamil News

சவூதி அரேபியாவின் NRTIA - (Non-Resident Tamil Indian Association) ஜித்தா, மேற்கு மண்டலம்சவூதி அரேபியா அமைப்பாளர் சேலம் சகோ. பிரேம்நாத் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 10.08.2024, சனிக்கிழமை தேரிழந்தூர் ஹாஜா முஹையுத்தீன் தலைமையில் தொடங்கிய பதிவு முகாம் இனிதே நடந்தேறியது


கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடு வாழ் தமிழருக்கு தனி நலவாரியம், அமைச்சமும் அமைத்து தமிழர்களின் நலன் காக்க பல்வேறு கட்ட ஆயத்த பணிகளை மேற்கொண்டதின் விளைவாகவும் கழக கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் மானமிகு திருச்சி N. சிவா M.A.B.L., M.P., அவர்கள் ஜித்தா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல்வேறு தருணங்களில் பிரதான மற்றும் முக்கியமான கோரிக்கையாக வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அமைச்சகம் அமைத்து தமிழர்களின் நலன் காக்க கோரிக்கைகள் வைத்ததின் காரணமாக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள் அயலக தமிழர்கள் நல வாரியம் அமைத்து அதற்கு மானமிகு செஞ்சி K.S. மஸ்தான் அவர்களை அமைச்சராகவும் மாநிலங்களவை உறுப்பினர் M.M. அப்துல்லாஹ் அவர்களை அயலகத் தமிழர் நல வாரியத்தின் துணை செயலாளராகவும், பல வருடங்கள் ஜித்தா மண்ணில் பணிபுரிந்து விட்டு தாயகம் திரும்பிய சகோ. விஜயன் அவர்களை நிர்வாகக் குழு உறுப்பினர் ஆகவும் பொறுப்புகள் வழங்கப்பட்டன.

அயலக தமிழர்கள் நல வாரியம் கடந்த 2024, மே மாதம் 18ந்தேதி அன்று வெளிநாடு வாழ் மற்றும் தமிழகம் அல்லாத இந்தியாவின் வெளிமாநிலங்களில் வசிக்கக்கூடிய தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து ஒவ்வொரு பயனாளர்களும் பயனடையும் வகையில் அடையாள அட்டை வழங்கும் அறிவிப்பையும் வெளியிட்டு வரும் ஆகஸ்ட், 15ம் தேதிக்கு முன்னால் அடையாள அட்டையை பதிவர்களுக்கு பதிவு கட்டணமாகிய 200 ரூபாய் தள்ளுபடி செய்துள்ளது தமிழக தளபதி அரசு.

அதன் தொடராக 10.08.2024, சனிக்கிழமை மாலை தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய காக்கி குடியிருப்பு பகுதியில் இலவச முகாம் நடத்தப்பட்டது. அதிகமான சகோதரர்கள் நேரிலும், பல்வேறு அலுவல்கள் காரணமாக வர இயலாதவர்கள் தகவல்களை பகிர்ந்து அடையாள அட்டை பதிவு செய்து கொண்டனர்.


இந்த நிகழ்வில் ஜித்தா தமிழ் சங்கத்தின் நிர்வாகிகளும், IWF அமைப்பின் நிர்வாகிகளும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.


அன்புடன் M. சிராஜ்

 
 
 

Comments


bottom of page