
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (தமுமுகவின் அயலக பிரிவு) மதீனா, சவுதி அரேபியா கடந்த 9-08-2024 வெள்ளிக்கிழமை அன்று வரலாற்று சிறப்புமிக்க புனித மதீனா மாநகரில் தொழில் அதிபர் காரைக்குடி இஸ்மாயில் அவர்களின் கடையில் நடத்திய இலவச அயலகத் தமிழர் அடையாள அட்டை பதிவு செய்யும் முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது , இதில் 30 க்கும் அதிகமான மதீனாவாசிகள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இந்தியன்ஸ் வெல்பேர் ஃபாரம் ஜித்தா மண்டல பொருளாளர் திருவண்ணாமலை நாசர் மற்றும் மதீனா பொறுப்பாளர் அறந்தை சித்திக் ரஹ்மான் ஆகியோர் பதிவு செய்து கொடுத்தனர்.
தொடர்ந்து சவூதி அரேபியாவில் பல இடங்களில் இதுபோன்ற முகாம்களை நடத்தி அதிகமான தமிழர்கள் பதிவு செய்து வைப்பதில் மும்முரமாக ஈடுபாடு காட்டும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (தமுமுகவின் அயலக பிரிவு) அமைப்பாளர்களே அனைவரும் பாராட்டுகிறார்கள்.
அன்புடன் M . சிராஜ்
Comentarios