top of page

இந்திய தமிழர் நலச்சங்கம் (NRTIA) ரியாதில் நடத்திய இலவச மருத்துவ முகாம்

Writer's picture: RaceTamil NewsRaceTamil News


தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சவுதி தி.மு.க வின் அயலக அணி புலம்பெயர் இந்திய தமிழர் நலச்சங்கம் (Non Resident Tamil Indians Association) மத்திய மண்டலம் ரியாத் பகுதி சார்பாக தமிழ் பேசும் மக்களுக்காக, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மாபெரும் இலவச மருத்துவ முகாம் 16.06.2023 சிறப்பாக நடந்தது .


ரியாத் - பத்தாவில் இருக்கும் Al Ryan International Polyclinic, வெள்ளிக்கிழமை ஜூன் 16 அன்று காலை 8 மணிக்கு துவங்கி இந்த மருத்துவ முகாம் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.


தமிழகத்தைச் சார்ந்த Al Ryan International Polyclinic மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்....Internist மருத்துவராக பணியாற்றும் டாக்டர் கார்த்திகேயன் அவர்களும், மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் ஆஷா கார்த்திகேயன் அவர்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள்.


இந்த மருத்துவ முகாமில், உடல் பருமன் தொடர்பான பரிசோதனைகள், இரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை, இரத்தக் கொழுப்பு பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, பல் மருத்துவ பரிசோதனை, மகப்பேறு மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பொது மருத்துவம் சார்ந்த பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது


N.R.T.I.A நடத்தும் இந்த நிகழ்வின் புரவலர்களாக Breeze Medcare, Universal Inspection Company, SAT Cargo , PRENISS International Pvt Ltr, மதுரை மெட்ரோ கஃபே - பத்தாஹ், வெல்கம் கஃபே பத்தாஹ் ஆகியோர் இடம்பெற்று சிறப்பித்தனர்.


இந்த மருத்துவ முகாமில் சுமார் 175 பேர் பயன் அடைந்தார்கள்.....பலன் அடைந்ததில் பெரும்பகுதி தமிழர்களே....பெண்களும் அதிக அளவில் பங்கு கொண்டார்கள்.


முழு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் குறிப்பாக மருத்துவர்களுக்கும் மருத்துவ மனை நிர்வாகிகளுக்கும் மருத்துவமனையில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கும் (NRTIA)அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இதர தோழமை இயக்கங்களுக்கும் NRTIA சவுதி துணை அமைப்பாளர் டாக்டர்.சந்தோஷ் நன்றி தெரிவித்தார்.



90 views0 comments

Comments


bottom of page