சவுதி அரேபியா நிறுவன தினத்தை முன்னிட்டு அயலக அணி வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம்(NRTIA) மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF) இணைந்து ரியாத் பகுதியில் தமிழர்களுக்கான , மாபெரும் இலவச மருத்துவ முகாம் 23.02.2024 சிறப்பாக நடந்தது.
மாபெரும் இலவச மருத்துவ முகாம் ரியாத் பிப்ரவரி 23, வெள்ளிக்கிழமை அன்று ரியாத் அல்-ரையான் மருத்துவமனையில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் வெளிநாட்டுவாழ் தமிழ் இந்தியர்கள் நலச்சங்கம் சார்பாக மாபெரும் இலவச மருத்துவ முகாம் குறிப்பாக இதய நலன் சார்ந்த நோய்களை மையமாக வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வை இந்திய தூதரகத்தினுடைய செயலர் திரு.மீனா அவர்களும், இலங்கை தூதரகத்தின் உயர் அதிகாரி சமண்ணா அவர்களும் தொடக்க விழா நிகழ்வில் தூதரக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குழுவில் இருக்கும் ஏர்வாடி சலீம் அவர்களும், NRTIA, IWF நிர்வாகிகளும் , உறுப்பினர்களும் தோழமை அமைப்புகளின் பிரதிநிதிகள் , மருத்துவமனை ஊழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து முகாம் முறைப்படி ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தைச் சார்ந்த மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டார்கள், இரண்டு அமைப்புகளின் தொண்டர்களும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்திருந்த மக்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி அனைவரையும் பதிவு செய்து ரத்த மாதிரிகள் எடுத்து அடுத்த பரிசோதனைகளை செய்து இரத்த மாதிரியின் சோதனை முடிவின் அடிப்படையில் கண் மருத்துவர் பல் மகப்பேறு மற்றும் மருத்துவர் பொது மருத்துவர் உள்ளிட்டோரின் ஆலோசனைகளைப் பெற்று அனைவரும் பயன் பெற்று சென்றனர்.
இந்த மருத்துவ முகாமில், உடல் பருமன் தொடர்பான பரிசோதனைகள், இரத்த அழுத்த பரிசோதனை, நீரிழிவு நோய் பரிசோதனை, இரத்தக் கொழுப்பு பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, பல் மருத்துவ பரிசோதனை, மகப்பேறு மற்றும் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் பொது மருத்துவம் சார்ந்த பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.
ஹவுஸ் டிரைவர் விசாவில் வந்திருக்கும் ஆண்கள் வீட்டு பணிப்பெண்கள் என அனைவருக்கும் மருத்துவ முகாம் மிகவும் பயனளித்தது. பெண்கள் உடல் சம்பந்தமான ஆலோசனைகள் கேட்டும் பரிசோதனைகளை மேற்கொண்டும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்த மருத்துவ முகாமில் சுமார் 425 தமிழர்கள் பயன் பெற்று மகிழ்ச்சி அடைந்தார்கள்.
அனைவருக்கும் NRTIA சவுதி தி.மு.கவின் அயலக அணி தலைமை டாக்டர் சந்தோஷ் துணை அமைப்பாளர், சவூதி அரேபியா, முன்னிலை திரு. பிரேம்நாத் அமைப்பாளர் சவூதி அரேபியா ஒருங்கிணைப்பாளர் திரு.ஜனார்த்தனன், தலைவர் திரு.அய்யபாடி ஜாகீர் உசேன், ரியாத் நிர்வாகிகள் திரு. வசிம் ராஜா, திரு. ஷேக் ஒலி, திரு.சாமி துரை, திரு. ராஜேந்திரன்,திரு.ஆறுமுகம், திரு.மேலூர் நவாஸ், திரு.மேலூர் ஷாஜகான், திரு. அப்துல் ரஹ்மான் திரு. முருகவேல் கலாச்சார மற்றும் இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் உறுப்பினர்கள் சிறப்பாக சேவகம் செய்தார்கள். காலையில் 8 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 4 மணி வரை சிறப்பாக நடந்தது.
முழு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் குறிப்பாக மருத்துவர்களுக்கும் மருத்துமனை நிர்வாகிகளுக்கும் மருத்துவமனையில் பணியாற்றுகின்ற ஊழியர்களுக்கும் (NRTIA)அமைப்பின் உறுப்பினர்களுக்கும் இதர தோழமை இயக்கங்களுக்கும் NRTI சவுதி துணை அமைப்பாளர் டாக்டர்.சந்தோஷ் நன்றி தெரிவித்தார்.
அன்புடன் சிராஜ்.
コメント