
ரியாத் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவரும், தஃபர்ரஜ் அமைப்பின் முன்னோடியும், U derstand Quran Acadamy, Chennai இன் தலைவரும், ZT express Logistic நிறுவனத்தின் உரிமையாளரான முஹைதீன் கஜ்ஜாலி அவர்கள் சென்ற 21-01-2025 அன்று சென்னையில் காலமானார்.

அவருடைய சமுதாய பணிகள், தமிழ் அமைப்பின் மூலம் செய்த தொண்டுகள் மற்றும் நற்செயல்களை நினைவு கூர்ந்து, அவருக்காக பிரார்த்திக்கவும் ஜெத்தா மாநகரில் செங்கடல் தமிழ்ச் சமூகம் நகரின் முக்கிய அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களை ஒன்றிணைத்து இரங்கல் கூட்டம் நடத்தியது.

கூட்டத்தை மெப்கோ நிறுவனத்தின் தலைவர் ஜெத்தா வாழ் தமிழ் மக்களின் முன்னோடி லியாக்கத் அலி அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.
ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் அல் அமான் அவர்கள் கிராத் ஓதி தொடங்கி வைக்க அவரைத் தொடர்ந்து ஜெத்தா தமிழ்ச் சங்கத்தின் சிராஜ் அவர்கள், மெப்கோ அனைப்பின் டாக்டர் ஜூபைர், நூருல் அமீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் IWF மேற்கு மண்டலத் தலைவர் கீழை இர்ஃபான், செந்தமிழ் நலமன்றம் ஷெரீஃப், ஜெத்தா தமிழ் சொல்வேந்தர் மன்றத்தின் முன்னாள் தலைவர் காயல் ஆதம் அபுல் ஹஸன், Z.T express logistic நிறுவன மேற்பார்வையாளர் அப்துல் ஹமீது, சமூக ஆர்வலர் ஹமீது, தி.மு.க மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் தாதை இஸ்மாயில், செங்கடல் தமிழ்ச் சமூக நிர்வாகிகள் குலாம் முஹைதீன்,
சாதிக் பாட்சா, நரேஷ், இர்ஃபான், ஜூல்பிகார், மைக்கேல்பட்டி ஃபரூக், அப்பாஸ் மற்றும் சமூக ஆர்வலர்கள் யூனுஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சகோதரர் கஜ்ஜாலி க்கும் சமூகத்திற்கும் இருந்த தொடர்புகள் நினைவு கூர்ந்து, அவரது சமூகப் பணிகள் குறித்தும் விவரித்து அவரது மறைவுக்கு வருத்தத்தைக் கூறி பிரார்த்திப்பதாக உரையாற்றினர்.
நிகழ்ச்சியை செங்கடல் தமிழ்ச் சமூகத்தின் நிறுவனர் தஞ்சை லயன் ஜாஹிர் ஹூஷைன் ஒருங்கிணைத்து நடத்தினார்.
மறைந்த முஹைதீன் கஜ்ஜாலி விட்டுச் சென்ற பணிகளை தொடர வேண்டும் என்றும் அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய அனைவரும் ஒத்துழைக்கவும் கேட்டுக் கொண்டு, இஷா தொழுகையும், பிரார்த்தனையும் செய்யப்பட்டு பின்னர் இரவு உணவுடன் நிகழ்வு நிறைவடைந்தது.
அன்புடன் M.Siraj
Comentarios